நாம் நினைத்த காரியத்தை நடத்தி முடிக்க கூடிய சித்தர்கள் வழிபாடு!!

By Sakthi Raj Apr 25, 2024 06:21 AM GMT
Report

சித்தர்களை பற்றி கேள்வி பட்டு இருக்கின்றோம்.சித்தர்கள் என்றால் சித்து விளையாட்டு செய்பவர்கள் என்று சொல்லுவார்கள்.உண்மையில் அவர்கள் தான் சித்தர்கள.

சித்தர்கள் ஆழ்ந்த தியானம் வழியாக தன்னை உணர்ந்து அதன் வழியாக இறைவனை அடைந்து உலகம் தெளிந்து வாழ்க்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள்.

நாம் நினைத்த காரியத்தை நடத்தி முடிக்க கூடிய சித்தர்கள் வழிபாடு!! | Sithargal 18 Sivam Kanda Sithargal Vazhipadu

மேலும்,  நாம் சித்தர்கள் பேசி பாத்திருக்கமாட்டோம்.காரணம் பேசி பயன் இல்லை ,உணர்தலே வாழ்க்கை என்று மனம் தெளிந்ததால் அவர்கள் பெரிதாக பேசுவதில்லை.மௌனமே அவர்களின் மொழியாக இருக்கும்.

குரு பகவான் யார்? தட்சணாமூர்த்தி யார்?

குரு பகவான் யார்? தட்சணாமூர்த்தி யார்?


அப்படி ஆழ்ந்த தியானத்தில் எப்பொழுதும் இறைவனை நினைத்து கொண்டு இருப்பதால் மட்டும் தான் அவர்களால் எதிர்காலம் நிகழ்காலம் பற்றி கணித்து சொல்லமுடிகிறது.

அவர்கள் சொல்லும் கணிப்பும் மிக சரியாக இருக்கும். இத்தனை சக்தி வாய்ந்த சித்தர்கள் நாம் வழிபட கேட்ட காரியம் நடக்கும் .ஆனால் அது நம் கர்ம வினைக்கேற்ப அவர்கள் அருள்புரிவார்கள்.

நாம் நினைத்த காரியத்தை நடத்தி முடிக்க கூடிய சித்தர்கள் வழிபாடு!! | Sithargal 18 Sivam Kanda Sithargal Vazhipadu

சித்தர்கள் நம்மிடம் எதுவும் பேசவில்லை என்றாலும், நாம் கேட்கும் காரியத்தை அடைய தகுதி நமக்கு உண்டா? இல்லையா ?நம் வாழ்க்கை பயணம் எப்படி செல்லும் என்றெல்லாம் தெளிவாக அவர் அறிந்திருப்பார்கள்.அதற்கு ஏற்ப நமக்கு பலன் தருவார்கள் .

மேலும்,ஒருவர் சித்தர்களின் அருளை பெற தினம் மனதார நினைத்து வழிபடலாம் இல்லை தங்கள் இருப்பிடம் அருகில் ஏதேனும் சித்தர் சமாதி இருந்தால் அங்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட நாம் நினைத்த காரியத்தை நம் கர்மா வினைக்கேற்ப அவர்கள் முடித்து கொடுப்பார்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US