கந்த சஷ்டி 5ஆம் நாள் செய்ய வேண்டிய வழிபாடு
முருகா என்று மனதார சொல்ல கந்தன் ஓடிவருவான்.பக்தர்களின் துயர் தீர்ப்பவர் முருகப்பெருமான்.கந்தனை நம்பியவர் கைவிடப்படார் என்பது போல் பக்தர்கள் முருகனை நினைத்து வழிபாடு செய்துவருகின்றனர்.
அப்படியாக முருகப்பெருமானின் வழிபாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த வாழிபாடு கந்த சஷ்டி வழிபாடு.பலரும் இந்த நேரத்தில் தொடர்ந்து முருகப்பெருமானை நினைத்து 6 நாட்கள் விரதம் இருந்து தங்கள் வழிபாட்டை மேற்கொள்ளவர்கள்.
அந்த வகையில் கந்த சஷ்டி விரதம் இன்று 5 ஆம் நாளில் நாம் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
அசுரனை அழிப்பதற்கு முருகப்பெருமான், சஷ்டி விரதத்தின் ஐந்தாவது நாளான இன்று, தாய் சக்தி தேவியிடம் இருந்து வேல் வாங்கிய வைபவத்தை தான், இன்று விமர்சியாக கொண்டாடுவார்கள். சிக்கலில் சிங்காரவேலன் திருத்தளத்தில் இந்த வைபவம் மிக மிக சிறப்பாக நடைபெறும்.
முருகப்பெருமான் தன் தாயிடம் இருந்து வேல் வாங்கிய பிறகு, சிக்கலில் இருக்கும் முருகப்பெருமானின் சிலை வியர்க்கக்கூடிய அதிசயம் நடைபெறும்.இவ்வளவு சிறப்பு கொண்ட இந்த வேல் வழிபாட்டை தொடர்ந்து நாமும் நம் வீட்டில் வேல் இருந்தால் அதற்கு பூஜை செய்து மந்திரம் செய்து வழிபாடு செய்வது சிறந்த பலனை தரும்.
இன்று வீட்டில் வேல் இருந்தால் சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்து சந்தன குங்கும பொட்டு வைத்து நம்மால் முடிந்த பழ வகைகள் கொண்டு நெய்வேதியமாக வைத்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் வேல் இல்லை என்றாலும் பரவாயில்லை.
முருகப்பெருமானின் திருவுருவப்படத்தில் இருக்கும் வேலுக்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து அந்த திருவுருவப்படத்திற்கு, பொட்டு வைத்து பழ வகைகள் நெய்வேத்தியம் செய்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொதுவாக எதிரிகளைத் தன் வசப்படுத்துபவர் முருகப்பெருமான்.
சூரகசம்காரம் செய்த பிறகு அரக்கர்களை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி தன்னுடனே வைத்துக் கொண்ட கருணை உள்ளம் படைத்தவன் முருகன். அவனுக்கு அழிக்க தெரியாது. ஆக்க மட்டும்தான் தெரியும். ஆகவே, எதிரியின் கெட்ட எண்ணங்களை, நல்ல எண்ணங்களாக மாற்றக்கூடிய சக்தி இன்றைய வழிபாட்டிற்கு உண்டு.
ஆக தொழில் மட்டும் சமுதாயத்தில் தேவை இல்லாத பிரச்சனை கொடுக்கும் மக்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள இன்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய நல்ல விடிவு காலம் பிறக்கும்.மேலும் இன்றைய நாளில் நாம் சொல்லவேண்டிய முருகர் மந்திரம்
சத்ரு சம்ஹார வேல் பதிகம்
சண்முகக் கடவுள் போற்றி !
சரவணத் துதித்தாய் போற்றி கண்மணி முருகா போற்றி !
கார்த்திகை பாலா போற்றி !
தண் மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி !
விண்மதி வதன-வள்ளி வேலவா போற்றி ! போற்றி !
மேலும் மயிலும் துணை.
மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முழுமையாக நம்பி செய்தால் நம் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை கண் எதிரே பார்க்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |