வினை தீர கந்த சஷ்டி விரதம் 4வது நாள் சொல்ல வேண்டிய மந்திரம்
மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடுகளில் முருகன் வழிபாடுகளும் ஒன்று.தீராத துயர் தீர பக்தர்கள் செய்வதறியாது இருக்கும் மக்கள் முருகனை பற்றி கொண்டு பல விரதங்கள் மேற்கொள்கிறார்கள்.அதிலும் கந்த சஷ்டி விரதம் பல மக்களால் இருந்து கடைபிடிக்க படுகிறது.
மனிதர்கள் துன்பத்தில் பல்வேறு வகை இருந்தாலும்.மனிதன் அகப்படக்கூடாத துன்பங்களில் முக்கியமான ஒன்று பிறரிடம் கடன் வாங்கும் ஒன்று.இந்த கடன் என்பது நம்முடைய மொத்த நிம்மதியையும் அது எடுத்து கொள்ளும்.
பலரும் வாழ்க்கையின் பல்வேறு சூழல் காரணமாக கடன் வாங்கி தவிப்பது உண்டு.அப்படியாக அந்த துன்பம் தீர கந்த சஷ்டி நான்காம் நாள் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
இவ்வாறு செய்வதறியாத துன்பத்திலும் மாட்டிக்கொள்ளும் பொழுது ஒரே ஒரு மண் அகல் விளக்கு எடுத்து தீபம் ஏற்றி விட்டு ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை 6 முறை சொல்ல வேண்டும்.
மேலும் முருகனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கி வைத்து ஒரு சிறிய கிண்ணத்தில் துவரம்பருப்பு வைக்க வேண்டும்.
கூடுதலாக இரண்டு செவ்வாழைப்பழங்களை வைத்து வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு முருகனின் முன்பு அமர்ந்து நம்முடைய மனதில் உள்ள பாரம் எடுத்து முருகனிடம் சொல்லி என்னுடைய துன்பத்தை நீதான் தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்கவேண்டும்.
அதை தொடர்ந்து முருகனுக்கு நைவேத்தியம் வைத்த துவரம் பருப்போடு கூடுதலாக துவரம் பருப்புகளை சேர்த்து, ஒரு சாம்பார் சாதம் செய்யுங்கள்.
அதை உங்கள் கைகளால் பத்து பேருக்கு நெய் சேர்த்து, செய்த சாம்பார் சாதத்தை அன்னதானம் செய்யுங்கள். ஒருவேளை கூட நல்ல உணவு கிடைக்காத ஏழைக்கு இந்த சாதம் போய் சேரும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது பிறர் மனம் குளிர்ந்து உங்களை ஆசீர்வாதம் செய்யும் அதோடு முருகப்பெருமானின் அருளும் கிடைத்து உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பம் நீங்கி வாங்கிய கடனை விரைவில் அடைப்பீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |