நடராஜரின் திருவடி தரிசனம் கண்ட பெண் யார் தெரியுமா?
ஐயன் ஈசனின் திருவாயால் அம்மையே என்று அழைக்கப்பெற்றவர் காரைக்கால் அம்மையார் இவர் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். ஆடல் அரசன் நடராஜரின் திருவடிகளை கண்டவர்என்று சிறப்புக்கள் கொண்டவர் அம்மையார். அப்பனை காண தலைகீழாய் நடந்து சென்று தரிசனம் செய்தவர் ஆவார்.
சிறு வயதிலே சிவ பெருமானின் தீவிர பக்தையான அம்மையாரின் சிவபக்தியையும் அதற்கு ஈசன் அருளிச்செய்தி அற்புதத்தையும் பார்ப்போம். காரைக்காலில் தனதத்தன்-தர்மவதி தம்பதிக்கு பிறந்தார் புனிதவதி. சிறு வயதில் இருந்தே இறைவன் மீது அதிகம் நாட்டம் கொண்டவர்.
அம்மையார் சிவனடியாருக்கு திருவமுது அளிப்பதில் அவருடைய வாழ்க்கையை கழித்தார். அம்மையாரின் பக்திக்கு ஈசன் செய்யாத திருவிளையாடலே இல்லை. அம்மையாரின் ஆன்மீக சக்தியை பார்த்து வியந்து கணவனும் விலகி சென்றான்.
காத்திருந்து கரைந்த அம்மையார், தன் கணவனுக்கு இல்லாத இந்த அழகு இனி எங்கு வேண்டேன் என்று "என்புரு தா" என இறைவனிடம் வேண்டினார். அவ்வாறே ஈசனும் அம்மையாருக்கும் உடல் தசை நீங்கி, எலும்புகளால் ஆன பேயுருவம் கொடுத்தார்.
அம்மையாரை கண்டு உலகமே அஞ்சியது. ஆனால், அம்மையாரை ஈசனை நோக்கி அவரின் பயணத்தை தொடர்ந்தார். ஈசன் குடிகொண்டு இருக்கும் இமயமலையில் தன் கால்களால் நடக்கமாட்டேன் என்று கையால் நடந்து கயிலைச் சேர்ந்தார்.
ஈசனும் அம்மையே என்று வரவேற்றார் அம்மையாரும் "அப்பா" என அழைத்து, திருவடிகளில் வீழ்ந்தார். அம்மையார் அப்பன் ஈசனிடம் பிறவாமையும், சிவபுகழ் பாடும் வரமும் பெற்றார்.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட அம்மையாரை நாம் மனதில் நினைத்தாலே நம்முடைய கவலைகள் விலகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக அம்மையிடம் சென்று முறையிட்டால் காரைக்கால் அம்மையார் நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கிறார்.
அதோடு மனதில் தீராத கோபமும், துரோகமும் சந்தித்தவர்கள் அம்மையாரின் பாடல்கள் படித்து வர அவரக்ளுக்கு மனதில் நிம்மதி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |