கர்மவினைகள் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்
கர்மா இதில் தான் நம்முடைய வாழ்க்கை சுத்தி சுத்தி வருகிறது.அதாவது நம்முடைய நல்ல எண்ணங்கள் தொடங்கி தீய எண்ணங்கள் வரை நாம் சிந்திப்பதற்கும் அதே சமயம் தெரியாமல் நிகழ்த்தியத்திற்கும் நாம் பலன் அனுபவித்தே ஆக வேண்டும்.அதில் நல்லது கெட்டது இவை இரண்டும் அடங்கும்.அப்படியாக அந்த கர்ம வினையால் சில வாழ்க்கை தடங்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நாம் இப்பொழுது அந்த கர்ம வினையை குறைக்கும் பரிகாரங்கள் பற்றி பார்ப்போம். உலகத்தில் மிக பெரிய கொடிய நோய் பசி என்றே சொல்லலாம்.நாம் எந்த வித குறை பாவங்கள் செய்து இருந்தாலும் பசியால் வாடுபவர்களுக்கு உணவு வாங்கி கொடுக்க நிச்சயம் அது நம்முடைய கர்ம பலனை குறைக்கும்.
அடிக்கடி நாம் ஒருவரது பசி ஆற்ற முடியாவிட்டாலும்,நாம் கொண்டாடும் முக்கியமான நாளான பிறந்த நாள் திருமண நாள் போன்ற தினங்களில் நாம் மனதார பிறருக்கு பசி ஆற உணவு வழங்க நிட்சயம் அது நம்முடைய வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமையும்.
மேலும் காலண்டரில் கரிநாள் என்று ஒன்று வரும். அதைக் கெட்ட நாள் என்று சொல்லி நாம் ஒதுக்கி வைத்து விடுவோம். அந்த நாளில் பெரும்பாலும் நல்ல விஷயங்களை யாரும் செய்யவதில்லை.ஆனால் இந்த கரிநாள் அன்று நாம் செய்யக்கூடிய அன்னதானம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கெட்ட கர்மாவை சீக்கிரம் குறைக்கும்.
கரிநாள் அன்று ‘கருவேப்பிலை சாதம்’ செய்து மூன்று பேருக்கு அன்னதானம் செய்யலாம். இவ்வாறு செய்யும் பொழுது நம்முடைய தடங்கல் யாவும் விலகும். அடுத்ததாக மாதத்தில் ஒரு நாள் ஏகாதசி விரதம் இருக்கலாம் அல்லது பிரதோஷ விரதம் இருக்கலாம்.
இந்த விரதத்தை சாப்பிடாமல் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்ப நாம் விரதம் இருக்கலாம்.ஆனால், அந்த ஏகாதேசி திதி அன்றும், பிரதோஷ திதி அன்றும் நீங்கள் சிவபெருமானையும், பெருமாளையும் வழிபடுவது அவசியம்.
இந்த இரண்டு வழிபாடுகளும் உங்களுடைய கர்ம வினைகளை குறைக்க கூடியதாக சொல்லப்பட்டுள்ளது.இவ்வாறு ஒரு சில எளிமையான விஷயங்களை நாம் மனதார செய்தாலே போதும் நம் வாழ்க்கை அழகாக மாறிவிடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |