சுபநிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடக்க செய்யவேண்டிய கற்பூர பரிகாரம்
எந்த ஒரு காரியம் அல்லது புது முயற்சிகள் செய்வேண்டும் என்று தொடங்கினாலும் அதில் தடங்கல் உருவாகுவதை நாம் பார்க்க முடியும்.அப்படியாக அந்த தடங்கல் பலரையும் மன சங்கடத்திற்குள் ஆளாக்கி விடும்.இவ்வாறு நாம் செய்யும் காரியம் தடங்கல் இல்லாமல் இனிதே நிறைவேற இறைவனை மனதார வழிபாடு செய்து தொடங்குவதும் உண்டு.
சமயங்களில் இந்த இறை சக்தியையும் தாண்டி சில தடங்கல் உருவாக வாய்ப்புகள் உள்ளது.நாம் இப்பொழுது ஏதேனும் சுபகாரியம் நிகழ்ச்சிகள் செய்யும் பொழுது எந்த ஒரு தடங்கல் ஏற்படாமல் சுலபாகமாக முடிய நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
பொதுவாக நாம் நம் குலதெய்வம் கோயில் அல்லது எந்த கோயிலுக்கு சென்றாலும் வழிபாடு செய்ய கற்பூரம் வாங்கி செல்லும் வழக்கம் இருக்கும்.மேலும் எந்த ஒரு தெய்வ வழிபாட்டை நிறைவு செய்யும் பொழுதும் கற்பூரத்தை ஏற்றி தான் நிறைவு செய்வோம்.
தெய்வ வழிபாட்டில் கற்பூரத்திற்கு அவ்வளவு பங்கு இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் கற்பூர மட்டுமே எந்தவித மீதமும் இன்றி முழுமையாக எரிந்து முழுமையாக ஜோதியாக மாறி இறைவனிடம் போய் சேரும் என்பதுதான்.
இவ்வளவு சக்தி வாய்ந்த வாய்ந்த கற்பூரம்தான் நம்முடைய காரிய தடைகள் இல்லாமல் நடக்க கைகொடுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கை,வேலை,படிப்பு,தொழில்,திருமணம்,குழந்தை போன்ற எந்த ஒரு தடங்கல் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
முடிந்தவர்கள் தினமும் கூட செய்யலாம்.அதிலும் முக்கியமாக செவ்வாய், வியாழன், வெள்ளி இந்த மூன்று கிழமைகளில் செய்வது மிக சிறந்த பலனை தருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய மிகவும் சிறந்த பலனை தரும்.இந்த பரிகாரத்தை முடிந்த அளவிற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம்.
இந்த பரிகாரம் செய்ய முதலில் வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு வீட்டின் மையப் பகுதியில் ஒரு தாம்பாளத்தை வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை சிறிதளவு ஊற்றி அதன் மேல் சுத்தமான கற்பூரத்தை போட வேண்டும். கற்பூரத்தை நெய்யின் மேல் போட்டுவிட்டு அதை ஏற்ற வேண்டும்.
இது முழுமையாக எரிந்து முடிந்த பிறகு அந்த தாம்பாளத்தை எடுத்து ஓரமாக வைத்து விடலாம். இந்த எளிய பரிகாரத்தை முடிந்தவர்கள் தினமும் செய்யலாம்.இப்படி நாம் செய்து கொண்டே வர வர நாம் மேலும் நாம் கற்பூரத்தை ஏற்றும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் எந்த விஷயத்தில் தடங்கல் அதிகம் உள்ளதோ அதை மனதில் நினைத்து கொண்டு நல்ல படியாக முடியவேண்டும் என்று ஏற்ற வேண்டும்.
இந்த மாதிரி பரிகாரம் செய்வதன் மூலம் நமக்கு ஹோமம் செய்த பலன் கிடைக்கும் என்று கூட கூறப்படுகிறது. அதனால் வெள்ளிக்கிழமை சமயத்தில் இந்த கற்பூர பரிகாரத்தை செய்யும் பொழுது நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் வைத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் வீட்டில் மகாலட்சுமி குடியேறுவாள் என்றும் கூறப்படுகிறது.
பல எதிர்மறை சக்திகளை விரட்டி நல்ல அதிர்வுகளை கொடுக்கும் இந்த சக்தி வாய்ந்த கற்பூர பரிகாரத்தை மனதார செய்து செய்யும் செயலில் தடங்கல் இல்லாமல் காரிய வெற்றி பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |