கார்த்திகை தீபம் 2024:வீட்டில் விரதம் இருந்து விளக்கு ஏற்றும் முறை?
கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு மிகுந்த மாதம்.இந்த மாதத்தில் தான் திருக்கார்த்திகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.அப்படியாக திருக்கார்த்திகை அன்று வீட்டில் எவ்வாறு விரதம் இருந்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று பார்ப்போம்.
இந்த கார்த்திகை மாதம் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.அதே போல் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயன் என்பதால் முருகப் பெருமானுக்கும் ஏற்ற மாதமாக கார்த்திகை மாதம் சொல்லப்படுகிறது.ஆதலால் சிவபெருமானுக்கும் முருகப்பெருமானுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் ஆக கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணைந்து வரும் நாளில் ஜோதி வடிவமாக இறைவனை வழிபடுவதற்காக தீபம் ஏற்றி திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை:
அப்படியாக இந்த ஆண்டு 2024 திருக்கார்த்திகை டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.அன்றைய தினம் காலையில் 06.51 மணிக்கு துவங்கி, டிசம்பர் 14ம் தேதி காலை 04.56 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது.
இதனால் கார்த்திகை விரதம் இருக்க நினைப்பவர்கள் முந்தைய நாள் பரணி நட்சத்திரம் அன்று இரவே விரதத்தை துவக்கி விட வேண்டும். மேலும்,திருக்கார்த்திகை அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விரதம் தொடங்கலாம்.முடிந்தவர்கள் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் மேற்கொள்ளலாம் முடியாதவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
விரதம் முடிக்கும் முறை:
கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படும்.அந்த வகையில் மாலை திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வரராக அண்ணாமலையார் வருடத்திற்கு ஒருமுறை, வெறும் 3 நிமிடங்கள் மட்டும் காட்சி தருவார்.அவர் அந்த தரிசனம் கொடுத்த பிறகு மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.
அங்கு தீபம் ஏற்றிய கையோடு நாம் நம் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம்.பிறகு பூஜை அறையிலும் நம் வீட்டின் மற்ற இடங்களிலும் விளக்கு ஏற்ற வேண்டும்.அதோடு மாலை 6 மணிக்கு பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.வீட்டில் குறைந்த பட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும்.
அதில் நிச்சயம் ஒரு தீபம் நெய் தீபம் ஏற்றுவது வீட்டில் சிறந்த பலனை தரும். இந்த ஆண்டு வரும் திருக்கார்த்திகை நாள் அன்று சேர்த்து பிரதோஷம் வருவது கூடுதல் விஷேசமாக கருதப்படுகிறது.
அதனால் மாலையில் திருவாசம், சிவபுராணம், சிவ அஷ்டகம் படிப்பது சிறப்பு.அதே போல் முருகப் பெருமானுக்குரிய திருப்புகழ், கந்தர் அலங்காரம் போன்றவற்றையும் படிக்கலாம்.
தீபம் ஏற்றும் முறை:
திருக்கார்த்திகை அன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றுவார்கள்.அப்பொழுது வீட்டில் 5 தீபம் ஏற்ற வேண்டும். பிறகு மாலை 27 விளக்குகள் ஏற்ற வேண்டும்.இவ்வாறு ஏற்ற சிவபெருமானின் பரிபூர்ண அருள் நமக்கு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |