இந்த ராசிகளுக்கு திருமணத்திற்கு பிறகு அமோகமான வாழ்க்கை காத்திருக்கிறதாம்
ஜோதிட ரீதியாக ஒரு சிலருக்கு திருமணத்திற்கு பிறகு தான் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பங்கள் அமையும். அதற்கு அவர்களுடைய ராசியும் ஜாதக அமைப்பும் காரணமாக இருக்கிறது. ஒரு சிலரை பார்த்திருப்போம், திருமணத்திற்கு முன்னதாக செய்கின்ற வேலையில் வளர்ச்சி இல்லாமை மற்றும் வியாபாரத்தில் தடைகள் போன்றவை இருக்கும்.
ஆனால் திருமணம் முடிந்த பிறகு அவர்கள் மிகப்பெரிய அளவில் அடுத்தடுத்த உயரங்களை தொட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு அமோகமான வாழ்க்கை வாழக்கூடியவர்கள் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு அவர்கள் வாழ்க்கை துணை வந்த பிறகு மிகப்பெரிய திருப்புமுனை காத்திருக்கிறது. அவர்கள் தொழில் ரீதியாகவும், வேலை தொடர்பாகவும் மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்கப் போகிறார்கள். பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் உயரம் இவர்களுக்கு வாழ்க்கை துணை வந்த பிறகு கிடைக்கக்கூடிய அமைப்பும் அதிர்ஷ்டமும் இருக்கிறது.
கடகம்:
கடக ராசியினருக்கு இவர்களுடைய வாழ்க்கை துணை வந்த பிறகு நீண்ட நாட்கள் இவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அங்கீகாரத்தை பெறுவார்கள். இவர்களுடைய திறமை திருமணத்திற்கு பிறகு அதிக அளவில் வாழ்க்கை துணையின் தூண்டுதலால் வெளிப்படும். சிலர் திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் படிப்புகளை முடித்து மிகப்பெரிய வேலைகளில் அமரக்கூடிய பாக்கியமும் புதிய தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்கு அவர்கள் வாழ்க்கை துணை வந்த பிறகு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டம் சூழ்ந்து விடும். அதாவது வாழ்க்கை துணையின் ஆதரவால் இவர்கள் தொழில் ரீதியாக கோடீஸ்வர யோகத்தை பெறக்கூடிய அமைப்பு இவர்களுக்கு உண்டு. வீடு வாகனம் போன்றவை இவர்கள் திருமணத்திற்கு பிறகு மிக எளிதாக வாங்க கூடிய அமைப்பு பெறுவார்கள். வாழ்க்கை துணையின் அதிர்ஷ்டத்தால் மிகப்பெரிய அளவில் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |