2026: திருக்கார்த்திகை தீபம் முதல் சபரிமலை மண்டல பூஜை வரை... முக்கிய விசேஷ தேதிகள் இதோ
தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாகவும் மிகவும் முக்கியமான மாதமாகவும் விளங்கக்கூடிய கார்த்திகை மாதம் பல ஆன்மீக சிறப்புகள் வாய்ந்ததாக இருக்கிறது.
அந்த வகையில், கார்த்திகை மாதத்தில் தான் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம், சபரிமலை ஐயப்பன் மண்டல பூஜை விரதம், முருகப்பெருமானுக்கு கார்த்திகை விரதம் ஆகியவற்றை செய்வதற்கு ஒரு மிக உகந்த மாதமாக உள்ளது.
அதை போல், மகாவிஷ்ணுவிற்கு உரிய பாஞ்சராத்திர தீபம் ஏற்றி வழிபடுவதற்குரிய ஒரு சிறப்பு வாய்ந்த மாதமாகவும், இறைவனைஒளி வடிவமாக வழிபாடு செய்வதற்கு ஏற்ற மாதமாகவும் கருதப்படுகிறது. லிங்க வடிபாடும், லிங்கோத்பவ வழிபாடும், திருவண்ணாமலை கிரிவலம் வழிபாடும் தோன்றிய மாதமாக கார்த்திகை மாதம் கருதப்படுகிறது.
அப்படியாக, இந்த கார்த்திகை மாதத்தில் 2026 ஆம் ஆண்டு என்னென்ன விசேஷங்கள், என்னென்ன தேதிகளில் வருகிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்வோம்.

கார்த்திகை மாதம் 2026 விசேஷங்கள் :
நவம்பர் 23 கார்த்திகை 07 திங்கள் பரணி தீபம்
நவம்பர் 24 கார்த்திகை 08 செவ்வாய் திருக்கார்த்திகை தீபம், ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம்
கார்த்திகை மாதம் 2026 விரத நாட்கள் :
அமாவாசை டிசம்பர் 08 கார்த்திகை 22 செவ்வாய்
பெளர்ணமி நவம்பர் 24 கார்த்திகை 08 செவ்வாய்
கிருத்திகை நவம்பர் 24 கார்த்திகை 08 செவ்வாய்
திருவோணம் டிசம்பர் 13 கார்த்திகை 27 ஞாயிறு
ஏகாதசி:
நவம்பர் 20, கார்த்திகை 04, வெள்ளி,
டிசம்பர் 04 கார்த்திகை 18 வெள்ளி
சஷ்டி:
நவம்பர் 29 , கார்த்திகை 13,ஞாயிறு,
டிசம்பர் 15 கார்த்திகை 29 செவ்வாய்
சங்கடஹர சதுர்த்தி
நவம்பர் 27 கார்த்திகை 11 வெள்ளி
சிவராத்திரி
டிசம்பர் 07 கார்த்திகை 21 திங்கள்
பிரதோஷம்
நவம்பர் 22 ,கார்த்திகை 06,ஞாயிறு,
டிசம்பர் 06 கார்த்திகை 20 ஞாயிறு
சதுர்த்தி டிசம்பர் 13 கார்த்திகை 27 ஞாயிறு

கார்த்திகை மாதம் 2026 சுபமுகூர்த்த நாட்கள் :
நவம்பர் 20 கார்த்திகை 04 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 29 கார்த்திகை 13 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 04 கார்த்திகை 18 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 06 கார்த்திகை 20 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 10 கார்த்திகை 24 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 13 கார்த்திகை 27 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 14 கார்த்திகை 28 திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
கார்த்திகை மாதம் 2026 வாஸ்து நாள், நல்ல நேரம் :
நவம்பர் 24 கார்த்திகை 08 செவ்வாய் காலை 11.29 - பகல் 12.05
பொறுப்புத் துறப்பு:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |