பண கஷ்டம் விலக 21 வாரம் செய்யவேண்டிய வழிபாடு
மனிதனுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டால் அடுத்து அடுத்து பிரச்சனைகள் அவர்களை சூழ்ந்து விடும்.அதிலும் நேரம் மிக மோசமானதாக இருந்தால் வரிசையாக அவர்களுக்கு ஒன்றின் பின் ஒன்றாக கடன் சேர்ந்து கொண்டே இருக்கும்.அப்பொழுது நாம் மனம் தளராமல் செய்ய வேண்டிய ஒரே பரிகாரம் இறை வாழிபாடு மட்டும் தான்.
மேலும் சிறப்பு மிகுந்த கார்த்திகை மாதத்தில் தீபங்கள் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும்.நாம் இப்பொழுது பண தடை,வாழ்க்கையின் சிக்கல் நீங்கி சந்தோஷமான வாழ்க்கை வாழ செய்ய வேண்டிய விளக்கு பரிகாரம் பற்றி பார்ப்போம்.
இந்த பரிகாரத்திற்கு மூன்று அகல் விளக்கை எடுத்து கொள்ள வேண்டும்.அந்த 3 மண் அகல் விளக்குகளையும் நேராக ஒரே நேர்கோட்டில் அந்த விளக்கை வைக்க வேண்டும்.அந்த அகல் விளக்கிற்கு ஒரு தட்டும் தயார் செய்து கொள்ள வேண்டும்.அந்த தட்டிற்கு மேல் வைத்து தான் இந்த விளக்கை வைத்து ஏற்ற வேண்டும்.
மூன்று விளக்கின் தீப ஒளி மட்டும் மூன்று திசைகள் பார்த்தவாறு வைக்க வேண்டும்.முதல் விளக்கு கிழக்கு திசை பார்த்தும்,இரண்டாவது விளக்கு மேற்கு திசை பார்த்தும்,மூன்றாவது விளக்கு வடக்கு திசை பார்த்தும் எரிய வேண்டும். இவ்வாறு வைக்கும் திசைகளுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கிறது.
கிழக்கு திசைக்கு அதிபதி இந்திரன். மேற்கு திசைக்கு அதிபதி வருணன். வடக்கு திசைக்கு அதிபதி குபேரன். இந்த மூன்று பேரையும் நினைத்து, குலதெய்வத்தை நினைத்து மாலை 6 மணிக்கு, நல்லெண்ணெயை மண் அகல் விளக்கில் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்றி வைத்துவிட்டு நம்முடைய வேண்டுதலை வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது தாங்கி கொள்ள முடியாத துன்பம் ஏற்படும் வேளையிலும் கடவுள் அதை சமாளிக்கும் சக்தியை நமக்கு கொடுப்பார்.
இப்படியாக நாம் ஏற்றிய விளக்கு 1 மணி நேரம் ஏறிய வேண்டும்.மேலும் இந்த விளக்கு வழிபாட்டை தொடர்ந்து 21 வாரம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு செய்யும் பொழுது நிச்சயம் விரைவில் இறைவன் அருளால் வீட்டில் நல்ல மாற்றங்களை சந்திப்பீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |