முருகன் பிரதிஷ்டை செய்த காசி சிவன் கோவில்.., எங்குள்ளது தெரியுமா?
வாரணாசியிலுள்ள மிகவும் புனிதமான சிவன் கோயில்களில் பிதாமஹேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும்.
ரகசியமாக, மறைத்தும் வைக்கப்பட்டிருக்கும் இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு மூர்த்தமாக தோன்றியது என்று கூறப்படுகிறது.
காசி விஸ்வநாதருக்கு இணையான பழைமையான லிங்கம் இது என்று நம்பப்படுகிறது.
இக்கோயிலை பற்றிய குறிப்புகள் கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிவனின் வழிகாட்டுதலில் இக்கோயிலை உருவாக்கியது முருகப்பெருமான் என்று கந்தபுராணத்தில் கூறப்படுகிறது.
முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்த இந்த சிவலிங்கம் காசியிலேயே மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான சிவலிங்கம் என்று கூறப்படுகிறது.
பிதாமஹேஸ்வரர் சிவலிங்கம் 40 அடி கீழே பூமியில் இருக்கிறது. வருடம் முழுவதும் மக்கள் மேலே அமைக்கப்பட்டிருக்கும் ஓட்டையிலிருந்து சிவனை தரிசிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
ஏகாதசி, சிவராத்திரி போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே இக்கோயில் திறக்கப்பட்டு சிவபெருமானின் தரிசனம் கிடைக்கும்.
கோயிலுக்கு உள்ளே செல்லும் பாதை ஆபத்தானது என்பதால் வருடத்திற்கு சில முக்கிய நாட்கள் மட்டுமே கோயில் திறக்கப்படுவதாக கூறுகிறார்கள்.
ஜல அபிஷேகம் மற்றும் வில்வ அபிஷேகம் லிங்கத்தின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் ஓட்டை வழியாகவே செய்யப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |