வீட்டில் தரித்திரம் விலக செய்யவேண்டிய சக்தி வாய்ந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
சிலரது வீட்டில் தொடர்ந்து கஷ்டங்களும் காரிய தடங்கலும் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.அதற்கு ஒரு தீர்வு பெற அவர்கள் எந்த முறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தாலும் எந்த ஒரு மாற்றமும் நிகழாது.அப்படியானவர்கள் வருத்தம் அடையாமல் ஞாயிற்றுக்கிழமை செய்யவேண்டிய வழிபாடும் பரிகாரம் பற்றியும் பார்ப்போம்.
இந்த கஷ்ட காலம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை கொடுத்து விடும்.கண்களை முடி திறப்பதற்குள் பல்வேறு சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.அப்படியானவர்களுக்கு ஒரே வழி இறைவழிபாடு தான்.
அதிசயமும் ஆச்சிரியமும் நம் வாழ்க்கையில் நடக்கவேண்டும் என்றால் இறைவனை மனதார நினைத்து வேண்டுதல் வைத்தாலே போதுமானது.அப்படியாக வீட்டில் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து இருப்பது போல் உணர்ந்தால் ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் வேண்டுதல் வைத்தால் இறைவனின் அருளால் எல்லாம் நல்ல விதமாக மாறும்.
காரணம் இந்த நாளில் வரும் ராகு காலம் அதீத சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும்,இந்த வழிபாட்டை செய்ய ஞாயிற்று கிழமை ராகு காலத்தில் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் காளியம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.
அவ்வாறு செல்லும் பொழுது எலுமிச்சை பழம் எடுத்து செல்ல வேண்டும்.எடுத்து செல்லும் அந்த எழுமிச்சை பழத்தில் எந்த ஒரு புள்ளிகள் இல்லாத எழுமிச்சை பழமாக இருக்கவேண்டும்.நாம் கோவிலுக்கு சென்ற பிறகு அங்கு இருக்கும் திரிசூலத்திற்கு முன்பாக நின்று கொண்டு காளியம்மனை மனதார நினைத்து கையில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை வைத்து உங்களுடைய தலையை வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும்.
இவ்வாறு சுற்றி முடித்த பிறகு நீங்கள் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி நின்று அந்த எலுமிச்சம் பழத்தை திரிசூலத்தின் நடுவில் குத்தி விட வேண்டும்.பிறகு காளியம்மனை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் எலுமிச்சம் பழத்தை வைத்து இந்த முறையில் நாம் பரிகாரம் செய்ய நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்,தரித்திரம் எல்லாம் விலகி வாழ்க்கையில் ஒளி வீசுவதை பார்க்கமுடியும்.வீட்டிற்கு அருகில் காளியம்மன் கோயில் இல்லை என்றாலும் அம்மன் ஆலயம் சென்று இந்த பரிகாரமும் வழிபாடும் செய்யலாம்.
ஆன்மீகத்தில் எலுமிச்சை பழம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.எழுமிச்சை பலத்திற்கு எப்பேர்ப்பட்ட தீய சக்திகளையும் அழிக்கும் சக்திகள் உண்டு.ஆதலால் இந்த வழிபாட்டை மனதார செய்யுங்கள்.உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் எல்லாம் அடியோடு விலகுவதை காணமுடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |