2026: பங்குனி அமாவாசை அன்று செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள்

By Sakthi Raj Mar 18, 2026 08:09 AM GMT
Report

பங்குனி அமாவாசை மிகவும் முக்கியமான அமாவாசையாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழ் ஆண்டில் வரக்கூடிய இறுதி அமாவாசை என்பதால் இதற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த அமாவாசையை சைத்ர அமாவாசை என்று அழைப்பார்கள்.

அப்படியாக இந்த 2026 ஆம் ஆண்டு தமிழ் ஆண்டின் கடைசி அமாவாசையாக பங்குனி அமாவாசை 18ஆம் தேதி காலை 8. 29 மணிக்கு துவங்கி மார்ச் 19ஆம் தேதி காலை 7. 29 மணி வரை இருக்கிறது. இந்த நாளில் நாம் தவறியும் செய்யக்கூடாது முக்கியமான சில விஷயங்களை பற்றி பார்ப்போம்.

1.இன்றைய நாளில் நாம் முடிந்தவரை அசைவ உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விட வேண்டும்.

2026: பங்குனி அமாவாசை அன்று செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள் | Things We Shouldnt Do On Panguni Amavasya

2026 சனி நட்சத்திர பெயர்ச்சி: உச்சத்திற்கு செல்ல போகும் ராசிகள் ? யார் தெரியுமா?

2026 சனி நட்சத்திர பெயர்ச்சி: உச்சத்திற்கு செல்ல போகும் ராசிகள் ? யார் தெரியுமா?

2. பங்குனி அமாவாசை நாளன்று நாம் சுபகாரிய பேச்சுக்களையும் தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

3. இந்த நாளில் கட்டாயமாக எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

4. வீடுகளில் சமைக்கும் பொழுது வெங்காயம் பூண்டு சேர்க்காமல் இருத்தல் என்பது விரதத்திற்கு சமமாக இருக்கிறது.

5. இன்று முன்னோர்கள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதால் நாம் அவர்களை மனதில் நினைத்து அவர்களுக்கான திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டுமே தவிர வீடுகளில் தேவை இல்லாத கோபம் கொண்டு சண்டை இடுவது போன்றவை தவிர்க்க வேண்டும்.

6. முக்கியமான வேலைகளை தவிர்த்து தேவை இல்லாத வெளியூர் பயணங்களை இன்றைய நாளில் தவிர்ப்பது நல்லது.

2026: இன்று பங்குனி அமாவாசை.. முன்னோர்களின் அருள் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

2026: இன்று பங்குனி அமாவாசை.. முன்னோர்களின் அருள் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

பங்குனி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்:

இன்று நம்முடைய முன்னோர்கள் அருள் நேரடியாக நமக்கு கிடைக்கும் என்பதால் நாம் அன்று பித்ரு தானம் செய்ய வேண்டும். ஏழை எளியவர்களுக்கு வஸ்திர தானம், உணவு தானம், குடை தானம் வழங்குவது நமக்கு ஒரு நல்ல முன்னேற்றம் கொடுக்கும். அதே போல், பசுவிற்கு அகத்திக்கீரை பழங்கள் வழங்கும்பொழுது நம்முடைய பாவங்கள் விலகுகிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US