100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் இரட்டை ராஜ யோகம்- கோடீஸ்வர யோகம் யாருக்கு?
ஏப்ரல் 13ஆம் தேதியான இன்று சூரியனும் புதனும் இணைவதால் புதாதித்ய ராஜயோகமும், சுக்கிரனும் புதனும் இணைவதால் லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகிறது. இந்த ராஜயோகம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகுவது குறிப்பிடத்தக்கது.
இதனால் 12 ராசிகளுக்கும் ஒரு வித தாக்கம் உண்டாகும். அந்த வகையில் இந்த இரட்டை ராஜ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் மிக பெரிய மாற்றமும், கோடீஸ்வர யோகமும் பெற போகிறார்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ரிஷப ராசிக்கு வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள் மனதை வருடிய குழப்பம் ஒன்று அகலும். பிள்ளைகளால் உண்டான கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்:
இந்த இரட்டை ராஜயோகத்தால் கடக ராசிக்கு எதிர்காலம் பற்றிய பயம் விலகும். எதையும் துணிந்து செய்து சாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்றும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும். பொருளாதாரம் மேம்படும். இந்த காலகட்டத்தில் புதிய சொத்துக்கள் மற்றும் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
மிதுனம்:
இந்த இரட்டை ராஜயோகத்தால் மிதுன ராசிக்கு வாழ்க்கையை பற்றிய நல்ல புரிதல் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதிவு உயர்வு சம்பள உயர்வை இந்த காலகட்டத்தில் எதிர்பார்க்கலாம். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் உள்ள சிக்கல் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |