கோபுர கலசத்தின் ரகசியமும் விஞ்ஞான அறிவாற்றலும்

Parigarangal
By Sakthi Raj Apr 26, 2024 01:00 PM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் இருந்தது.

என்ன காரணம் என்றால் கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை கலசங்களுக்கு கொடுக்கின்றன.

கோபுர கலசத்தின் ரகசியமும் விஞ்ஞான அறிவாற்றலும் | Kopuram Tharisanam Kodipuniyam Kalasam

நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் ஆகியவை கோபுர கலத்தில் இருக்கும்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக இருக்கும். காரணம் என்ன வென்றால் "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றது என அந்தகாலத்திலேயே அறிந்து வைத்துள்ளார்கள். இந்த நுட்பம் மிகவும் சரியான விசயம் என இப்போதுள்ள அறிவியல் கூறுகிறது.

இப்போதும் புதிதாகக் கட்டப்படும் கோயில் கோபுர கலசங்களில் தானியங்களை அடைத்து வைக்கும் இந்த வழக்கம் தொடர்கிறது.

இதை செய்துவிட்டு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும் பாவம் தீராது

இதை செய்துவிட்டு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும் பாவம் தீராது


கோயில் கோபுரத்தின் கலசம் மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் அந்த தானியங்கள் மிகவும் பத்திரமாக இருக்கும் என்றும், இயற்கைச் சீற்றங்கள், படையெடுப்பு, பஞ்சம் உள்ளிட்ட காலங்களில் இவை வேளாண்மை செய்ய பயன்படுத்தப்பட்டு, மக்களின் பசிப்பிணியைப் போக்க உதவும் என்றும் சொல்கின்றனர்  

இந்த தானியங்களின் திறன் 12 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கக்கூடியது.

அதற்கு பிறகு தானியங்கள் தன் சக்தியை இழந்துவிடும் என்பதால் பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். மேலும் கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் சொல்லுவார்கள் அதை பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.

 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US