நாளை(26.08.2024)கிருஷ்ண ஜெயந்தி வீட்டில் கொண்டாடும் முறை என்ன?
பல அசுரர்களை அழிக்கவும், மகாபாரத யுத்தத்தின் மூலம் உலகிற்கு எந்த நிலை வந்தாலும்,இறுதியில் தர்மம் தான் எப்போதும் வெல்லும் என்பதை உணர்த்தக் கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார்.
அப்படியாக ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நாளில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார்.அன்று தான் உலகம் எங்கும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இப்பொழுது நாம் நாளை(26.08.2024)வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி எப்படி கொண்டாடுவது என்று பார்ப்போம். அனைவரும் வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜை செய்து திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபட வேண்டும்.
இந்த தினத்தில் மூன்றே முக்கால் நாளிகையாவது அதாவது (ஒரு நாளிகை 24 நிமிடம்) ஒன்னரை மணி நேரமாவது விரதம் இருப்பது நல்லது. இதனால் நாம் மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கி, நல்லருள் சேரும். குடும்பத்தில் குறையாத செல்வங்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.
மேலும் கிருஷ்ண ஜெயந்தி என்றாலே வீடுகளில் கிருஷ்ணர் பாதம் வரைந்து வழிபடுவது என்பது விஷேசம்.வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்கள் பாதம் வைத்து பாதம் வைப்பார்கள் இல்லை என்றால் நாமே வீட்டில் பாதம் வரையலாம்.
அடுத்தபடியாக கிருஷ்ணர் பிறந்த போது மூன்று நபர்கள் மட்டும் விழித்திருந்ததாகக் கூறப்படுகிறது. வசுதேவர்- தேவகி மற்றும் சந்திர பகவான். இதனால் கிருஷ்ண ஜெய்ந்தி வழிபாடு, பூஜை சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகு மாலை நேரத்தில் செய்வது சிறந்தது.
அதிகாலையில் குளித்துவிட்டு நாம் விரத சடங்குகளைத் தொடங்க வேண்டும் கிருஷ்ண பூஜைக்காக ஒரு பலகையில் சிவப்பு நிற துணியை விரித்து பிறகு அந்த பீடத்தில் பகவான் கிருஷ்ணரின் சிலை அல்லது புகைப்படத்தை வைக்க வேண்டும்.
பூஜை தொடங்குவதற்கு முன்னர் கிருஷ்ணருக்கு முன் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மீது சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மீது ஒரு வெண்கல குடம் நிறைய நீருடன் வைத்து, அதன் மீது மாவிலை வைத்து, தேங்காயைக் கலசம் போல வைக்கவும்.
கலசத்தின் வலது புறம் மஞ்சளால் பிள்ளையாரைப் பிடித்து வைக்கவும். பின்னர் அந்த கலசத்திற்கும் பிள்ளையாருக்கும் திலகம் இடவும், பூக்கள், மாலைகள் இடவும்.பிறகு நெய் விளக்கேற்றி அதன் முன் பூஜை பொருட்களைவைத்து பிள்ளையாரையும், கிருஷ்ணரையும் வணங்கி பூஜையை தொடங்கலாம்.
பூஜை தொடங்கும் முன் விநாயகர் வழிபாடு செய்வது அவசியம். கலசத்திற்கும், கிருஷ்ணருக்கும் தீப, தூப ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்து வழிபாடு வைத்து கொள்ள வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று நாம் இவ்வாறு வீட்டில் செய்து வழிபடுவதால் வீட்டில் கிருஷ்ணரின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |