கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் என்ன சாப்பிடலாம்?சாப்பிடக்கூடாது ?
ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நாளில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார்.இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பகவான் மகாவிஷ்ணு 10 அவதாரங்கள் எடுத்து நம்மை காத்தருளினார்.
அதில் அவர் தன்னுடைய 9வது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை தான், கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகின்றோம். 10வது அவதாரம் கலியுகம் முற்றும் போது கல்கி அவதாரமாக எடுப்பார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.
அப்படிப்பட்ட முக்கிய காக்கும் தொழிலை செய்ய அவதரித்த கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த கிருஷ்ணா ஜெயந்தி அன்று பலரும் விரதம் இருந்து கிருஷ்ணரை வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக அன்றைய தினத்தில் விரதம் இருக்கும் முறை என்ன?விரதம் இருந்தால் என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம். கிருஷ்ண ஜெயந்தி அன்று பகவான் கிருஷ்ணரை நினைத்து முழு மனதுடன் விரதம் இருந்து வேண்டினாள் மன தூய்மை,செல்வம் அனைத்தும் கிடைக்க பெறுவோம்.
கிருஷ்ணரின் மிக தீவிர பக்தர்கள் உணவு, நீர் இல்லா விரதம் மேற்கொள்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் என எந்த ஒரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதம் இருப்பது வழக்கம்.
சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் இரவு 12 மணிக்கு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின்னர் தன் விரதத்தை முடிப்பார்கள்.
மேலும் கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருப்பவர்கள் உணவு ஏதும் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் விரதம் இருக்கலாம்.
வயதானவர்கள் மருந்து எடுத்துக் கொள்பவராக இருந்தால் பழங்களை மட்டும் சாப்பிடலாம். அதுபோல அரிசியில் சமைத்து உணவை தவிர ஜவ்வரிசி கஞ்சி சப்பாத்தி போன்றவற்றை சாப்பிடலாம்.
அதுமட்டுமின்றி, அந்நாளில் விரதம் இருப்பவர்கள் தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை தானமாக செய்வது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் அன்றைய தினத்தில் பசுக்களுக்கு உணவு அளிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது.விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் சோர்வாக இல்லாமல் முழு ஆற்றலுடன் இருக்க பழங்கள் மற்றும் உலர் பழங்களை சாப்பிடலாம்.
மேலும் கிருஷ்ண ஜெயந்தி அன்று சில விஷயங்களை சாப்பிட கூடாது அதில் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும் வீட்டில் சமைக்கும் பொழுது வெங்காயம், பூண்டு பயன்படுத்தவே கூடாது. வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத உணவை தான் வீட்டில் சமைக்க வேண்டும்.
அதுபோல இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது. விரதம் இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதற்கு பதிலாக பழங்கள், பால், பழ ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |