வீடுகளில் இந்த வகை துளசி செடி வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்

By Sakthi Raj Oct 26, 2025 09:01 AM GMT
Report

இந்து மதத்தில் நம் வீடுகளில் துளசி செடியை வைத்து வழிபாடு செய்வது என்பது ஆன்மீக மற்றும் ஆரோக்கிய ரீதியாக நமக்கு பல நன்மைகள் வழங்குவதாக சொல்கிறார்கள். அப்படியாக துளசியில் இரண்டு வகைகள் உள்ளது. ஆனால் இந்த அமைப்பு பலருக்கும் தெரிவது இல்லை. அதாவது துளசிகளில் ராம துளசி மற்றும் கிருஷ்ண துளசி என்று இரண்டு வகை துளசிகள் உள்ளது.

இதில் எந்த துளசியை நம் வீடுகளில் எந்த திசையில் வைத்தால் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

நம்முடைய வீடுகளில் எந்த செடிகள் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் துளசி செடி வைத்திருக்க வேண்டும். காரணம் துளசி செடி வீடுகளில் இருக்கும் பொழுது நமக்கு பல்விதமான நன்மைகளை கொடுக்கிறது. அவ்வாறு வீடுகளில் வைத்திருக்கும் துளசிகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்வது என்பது மிகவும் புனிதமான ஒன்றாகும்.

வீடுகளில் இந்த வகை துளசி செடி வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம் | Krishna Tulasi Rama Tulasi Which Is Good For Home

பொதுவாக வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு வழிபாட்டிற்கு உரிய முக்கிய நாள் ஆகும். இந்த நாளில் துளசி செடிக்கு நாம் பால் அபிஷேகம் செய்வது நம் வீடுகளில் சந்திக்கக்கூடிய பொருளாதார பிரச்சினையை குறைத்து நமக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது. மேலும் துளசி செடிகளில் ராம துளசி, கிருஷ்ண துளசி என்று இரண்டு வகைகள் இருக்கிறது.

இந்த இரண்டு துளசி செடிகளுமே தோற்றத்தில் வெவ்வேறு வகைப்படுகிறது. ராம துளசி பச்சை நிறத்திலும் கிருஷ்ண துளசி ஓரளவு பழுப்பு மற்றும் ஊதா நிறத்திலும், குடை வடிவத்திலும் காணப்படுகிறது. மேலும் இந்த இரண்டு துளசி செடிகளிலும் வரக்கூடிய நறுமணமும் வேறுபடுகிறது.

முருகர் மூலமாக 2031-ல் நடக்கப்போகும் அதிசயம்

முருகர் மூலமாக 2031-ல் நடக்கப்போகும் அதிசயம்

இதில் ராம துளசி என்பது ஒரு லேசான நறுமணத்தையும், கிருஷ்ண துளசி என்பது வலுவான நறுமணத்தையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த கிருஷ்ண துளசி என்பது வெப்ப விளைவைக் கொண்டது. ஆனால் ராம துளசி குளிர்ச்சியான தன்மையை கொண்டுள்ளது.

வீடுகளில் இந்த வகை துளசி செடி வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம் | Krishna Tulasi Rama Tulasi Which Is Good For Home

இந்த கிருஷ்ண துளசி ஆனது கிராம்பு மற்றும் மிளகாய் நினைவூட்டக்கூடிய ஒரு சுவையை உடையது. இதை நாம் தேநீரில் கலந்து உட்கொள்ளலாம். அப்படியாக கிருஷ்ண துளசி அல்லது ராம துளசி இதில் எதை நாம் வீடுகளில் நட்டு வைத்தால் நன்மை கிடைக்கும் என்ற பல கேள்விகள் இருக்கும்.

அப்படியாக வீடுகளில் கிருஷ்ண துளசி வைப்பது நமக்கு மிகச் சிறந்த பலன் கொடுக்கும். இந்த துளசியை நடும்போது வீடுகளில் உள்ள பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் விலகுகிறது. துளசி வழிபாடுகளில் மொட்டுக்களை பறிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

ஒரு செடியில் அதிக பூக்கள் இருந்தால் அது வழிபாட்டில் குறைவான சக்தி வாய்தாக இருக்கிறது. மேலும் துளசி செடிகள் வாடிய மொட்டுக்களை தவறாமல் அகற்றி விடுவது நமக்கு நன்மை அளிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி துளசி செடியை வடகிழக்கு திசையில் தான் நம் நட வேண்டும்.

சிலர் துளசிச் செடியை மேற்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் நட வேண்டும் என்று நம்புகிறார்கள். இருந்தாலும் தெற்கு திசையில் மட்டும் நாம் நடக்கூடாது. தினமும் வீடுகளில் துளசி செடியை வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கை மேன்மை அடைவதை நாம் காணலாம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US