உலகின் சிறந்த செல்வத்தை சேர்ப்பது எப்படி?
எத்தனை செல்வங்கள் புகழ் குவிந்தென்ன இறைவன் அவன் அருள் இல்லையெனில் ஒன்றும் இல்லை. செல்வம் தான் பெரிதெனில் அந்த செல்வதில் பெரிது எது என்பதை பார்ப்போம் .
அதாவது பசுக்களில் சிறந்தது காமதேனு,
மரங்களில் சிறந்தது கற்பகம் ,
மைந்தர்களில் சிறந்தவர் குமாரகடவுள் .
அது போல் செல்வங்களின் உயர்ந்தது "அருட்செல்வம்". இதுதான், உண்மையான செல்வமாகும்.
அருட்செல்வம், அதை தான் ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில் சேர்க்கவேண்டும்.
இவ்வுலகில் வாழ பணம் பொருள் இருந்தால் போதும், ஆனால் மேல் உலகில் வாழ ஒருவருக்கு கண்டிப்பாக அருட்செல்வம் வேண்டும். அப்பொழுது தான் அங்கு நிம்மதியாக வாழ முடியும்.
அருட்செல்வத்திற்கு மிக சிறந்த உதாரணமாக குசேலரின் கதை ஒன்று இருக்கிறது.
அதாவது குசேலர் ஒருநாள் தனது நண்பன் கிருஷ்ணனை சந்திக்க துவாரகைக்கு நடந்து சென்ற கொண்டிருந்தார்.
அப்பொழுது கடுமையான வெயில். ஆனாலும், அவர் செல்லும் சாலையில் இரு புறங்களிலும் பசுமையான மரங்கள் இருந்தன.
ஆனால், அவர் மரங்கள் தரும் நிழலில் நடக்கவில்லை. ஏன் தெரியுமா? மரங்கள் தரும் நிழலில் ஈக்கள், புழுக்கள், பறவைகள் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும்.
அதில் நடந்தால் அவைகள் இறந்து விடும் என்று எண்ணி தனது கால்கள் சுட்டாலும் பரவாயில்லை என்று கைகளால் தலையை மறைத்து அவை தரும் நிழலில் நடந்தார்.
இதுதான் அருளுடைமையின் கடைசி பகுதி என்று சொல்லலாம். அதாவது எவன் ஒருவன் இந்த உலகம் வாழ்க்கை ஆன்மாவை முழுமையாக புரிந்து கொண்டானோ அவனுக்கு எல்லாமே ஓர் உயிர் ஆகிவிடும் பாகுபாடுகள் தெரியாது.
அந்த நிலை தான் மனிதன் இடத்தில் இருக்க வேண்டும்
தர்மம் கடைபிடித்து பிற உயிர்களுக்கு துன்பம் இழைக்காமல் வாழ்ந்தாலே ஆன்மா மேன்மை அடைந்து அருட்செல்வம் நம்மை வந்து அடையும். ஆதலால் பிற உயிர்கள் இடத்தில் கருணையோடு வாழ்வோம்.