குலதெய்வம் சாபம் மற்றும் தோஷம் என்பது உண்மையா?

By Sakthi Raj Oct 03, 2026 04:24 AM GMT
Report

குலதெய்வ வழிபாடு மற்றும் குலதெய்வத்தினுடைய சாபம் மற்றும் தோஷம், போன்ற பல விஷயங்களை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் உமா வெங்கட் அவர்கள். அதை பற்றி பார்ப்போம். ஒரு குடும்பத்தை காக்கக்கூடிய தெய்வமாக குலதெய்வம் இருக்கிறது.

நம்முடைய குடும்பத்தில் தோஷம் பிரச்சனைகள் எதுவும் இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் நிச்சயமாக குல தெய்வத்தினுடைய அருள் என்பது மிக மிக முக்கியம்.

அந்த வகையில், ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள ஐந்தாம் வீட்டை அடிப்படையாக அடிப்படையாகக் கொண்டு குல தெய்வத்தை நாம் அறிய முடியும். ஜாதகம் இல்லாதவர்கள் பிரசன்னம் மூலம் அதனை பார்க்கலாம். குலதெய்வம் தெரியாதவர்கள் நிச்சயமாக அவர்களுக்கு விருப்பமான தெய்வத்தை மனதார தொடர்ந்து வழிபாடு செய்யலாம்.

மகாபாரதம்: கிருஷ்ணர் ஏன் இந்த இடங்களில் அமைதி காத்தார் தெரியுமா?

மகாபாரதம்: கிருஷ்ணர் ஏன் இந்த இடங்களில் அமைதி காத்தார் தெரியுமா?

அவர்களுக்கு சரியான கால நேரம் கூடி வருகின்ற பொழுது குலதெய்வத்தை பற்றிய ஒரு தெளிவு கட்டாயம் கிடைக்கும். மேலும், குலதெய்வம் எப்பொழுதுமே அவர்களுடைய பக்தர்களை சபிப்பது போன்ற விஷயத்தை செய்வதே கிடையாது.

மேலும், பலருக்கும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகளும் தாமதங்களும் அவர்களுடைய குலதெய்வத்தின் கோபத்தினால் ஏற்படுவது. அது குலதெய்வத்தின் கோபத்தினால் வருவது அல்ல. அது முன்னோர்களின் அருளில் ஏற்படக்கூடிய குறைபாடு அல்லது சூழ்நிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய நிகழ்வாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், திருமணத்திற்கு பிறகு பெண்கள் அவர்களுடைய கணவர் வழி குல தெய்வத்திற்கே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேபோல் தந்தை வழி குல தெய்வத்தையும் அவர்கள் தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

அப்படியாக, குலதெய்வம் மற்றும் ஜோதிடத்தைப் பற்றி பல்வேறு தகவல்களை நாம் இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.   


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US