வீட்டில் குலதெய்வம் தங்கணுமா? இந்த 5 பொருட்களை மறக்காமல் எடுத்துட்டு வாங்க
நம் வீட்டில் குலதெய்வம் நிரந்தரமாக குடியிருந்து நம்மை காக்க வேண்டும் என்றால் குலதெய்வத்தின் கோவிலில் இருந்து ஐந்து முக்கிய பொருட்களை எடுத்து வர வேண்டும்.
அந்த பொருட்கள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

குலதெய்வம் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது அங்கிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வந்து சிகப்பு அல்லது மஞ்சள் துணியில் கட்டி சந்தனம், குங்குமம் இட்டு அதை வீட்டில் நுழைவாயில் அல்லது பூஜை அறையில் வைத்து விட வேண்டும். அடுத்தமுறை குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் இந்த மண்ணை ஆற்றில் கரைத்து விட்டு மீண்டும் புதிய மண்ணை எடுத்து வர வேண்டும்.
குலதெய்வ கோயிலின் மண்ணை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாதவர்கள் அல்லது நாள் தவறாமல் பூஜை செய்ய முடியாதவர்கள் எலுமிச்சம் பழத்தை வாங்கி வரலாம். சிகப்பு அல்லது மஞ்சள் துணியில் கட்டி சந்தனம், குங்குமம் வைத்து நிலை வாசல் அல்லது பூஜை அறையில் வைத்து விடவும்.
கோவில் திருவிழாக்களின் போது நடைபெறும் தீமிதி நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் சாம்பலை எடுத்து வரலாம். இதை பூஜை அறையில் திருநீறுடன் கலந்து வைத்துக் கொண்டு தினமும் நெற்றியில் பூசி வரலாம். அங்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படும் சந்தனத்தை எடுத்து வந்து வீட்டில் பயன்படுத்தலாம்.
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறை வாங்கி அதை சுவாமியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தாலிச்சரடை மாற்றும் பொழுது இந்த கயிறை பயன்படுத்திக் கொள்ளலாம்.