கருட புராணம்: அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மா எங்கே செல்லும்?
கருட புராணம் என்பது விஷ்ணு பகவானுக்கும் கருடற்கும் இடையிலான நடந்த உரையாடல் ஆகும். இதில் நம்முடைய மனித வாழ்க்கைக்கு சரியான விஷயங்கள் எதுவென்று வழிவகைக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மனிதருக்கு பிறப்பு என்பது எவ்வளவு இயல்பானதோ அதேபோல் மரணமும் மிகவும் இயல்பான ஒன்று.
ஆனால் இந்த மரணம் என்பது எல்லோருக்கும் ஒருவித அச்சத்தை கொடுக்கிறது. அவர்கள் உண்மை நிலை உணர மறுத்து கடந்து சென்று கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் கருட புராணப்படி ஒருவருக்கு அகால மரணத்திற்கு பின்பு அவர்களுக்கு என்ன நடக்கிறது? அவர்களுக்கு மோட்சம் கிடைக்குமா? என்பதை பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஒருவருக்கு அகால மரணம் பல காரணங்களால் நிகழ்கிறது. அதில் முக்கியமாக கிரகங்களுடைய தாக்கம், கடுமையான பாவ செயல்கள், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் தீய பழக்கவழக்கங்கள் ஆகியவை இதில் அடங்குகிறது.
இந்த இக்கட்டான நிலையை ஒருவர் கடந்து செல்ல வேண்டுமென்றால் தர்ம காரியங்கள் செய்வதாலும் இறை பக்தியில் ஈடுபடுவதனால் மட்டுமே முடியும் என்றும் கருட புராணம் நமக்கு தெளிவாக எடுத்து சொல்கிறது.
அந்த வகையில் கருட புராணத்தின் படி ஒருவர் இயற்கையாக மரணித்து விட்டால் அவர்களுடைய ஆன்மா உடனடியாக எமலோகத்திற்கு பயணத்தை தொடங்குகிறது என்றும் இதில் விபத்து நோய் அல்லது தற்கொலை காரணமாக அகால மரணம் ஏற்பட்டவர்களுக்கு மட்டும் நிலைமை சற்று மாறுபடும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது இந்த உலகத்தில் உடல் மட்டுமே அழிவை பெறக்கூடியது. ஆன்மா பல உருவங்களை எடுத்து பல பிறவிகளை கடந்து வாழக்கூடியது. அதனால் கருட புராணத்தின் படி அகால மரணம் அடைபவர்களின் ஆன்மாக்கள் அவர்களின் இயற்கையான ஆயுட்காலம் முடியும் வரை இந்த பூமியில் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
அதைப்போல் ஒருவருக்கு அகால மரணம் நிகழும் பொழுது அந்த குடும்ப உறுப்பினர்கள் அவர்களுடைய ஆன்மாவின் துன்பத்தை குறைக்க சில நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்காக நாராயண பலி பூஜை உடன் பல்வேறு புனித யாத்திரை தலங்களில் பிண்ட தானம் சடங்கு ரீதியாக வழங்குவது போன்ற விஷயங்கள் நல்ல மாற்றம் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்யும் பொழுது அவர்களுடைய ஆன்மா அமைதி நிலையை பெற்று முக்தி அடையும் என்று சொல்கிறார்கள்.
மேலும் கருட புராணத்தின் படி மனிதர்களுடைய வாழ்க்கையில் ஒருவருக்கு கடமையை செய்தல் மட்டுமே அவர்களுடைய வேலையே தவிர்த்து அதற்கான பலனை அவர்கள் எதிர்பார்க்காமல் இருப்பதே தர்மம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆதலால் நம்முடைய வாழ்க்கையில் தர்மத்தோடும் நல்ல சிந்தனையோடும் செயல்கள் செய்து வாழ்ந்தாலே இந்த பிரபஞ்சம் அதற்குரிய நல்ல பலனை கட்டாயம் நமக்கு கொடுக்கும் என்பதை கருட புராணம் நமக்கு மிகத் தெளிவாக சொல்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |