உங்கள் கர்ம வினைகளில் இருந்து விடுபட இதை மட்டும் செய்யாதீர்கள்
மனிதர்களுடைய வாழ்க்கை கர்மா என்ற கணக்கில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் வேண்டுமானால் கணக்குகளில் பல நேரங்களில் தவறுகள் செய்து விடலாம். ஆனால் இந்த பிரபஞ்சம் புள்ளி மாறாமல் கணக்குகளை சரியாக செய்து யாருக்கு என்ன சேர வேண்டுமோ? அதை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கிறது.
அப்படியாக நம்முடைய இந்த பிறவியே பல பிறவிகளின் கர்ம வினையின் தொடர்பாக என்று ஆன்மீக ரீதியாக கருதப்படுகிறது. ஒரு சிலர் இதனை புரிந்து கொண்டு மோட்சம் வேண்டியும் பிறவா நிலை வேண்டியும் இறைவனை பிரார்த்தனை செய்வார்கள். இன்னும் கூடுதலாக ஞானிகள், யோகிகள் கடும் தவம் புரிவார்கள்.
இருப்பினும் சாதாரண மனிதர்களால் இதை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடிவது இல்லை. அதனால் தெரியாமல் சில தவறுகள் செய்து அவர்களின் கர்ம பலனை இன்னும் அதிகரித்து கொள்கிறார்கள். அப்படியாக, நம்முடைய பல பிறவிகளில் தொடர்ந்து வந்த கர்ம வினைகளிலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

1. இந்த பிரபஞ்சத்தில் எது நடந்தாலும் அது காரணம் காரியத்திற்காகவே நடக்கிறது. அதனால் என்ன நடந்தாலும் அவை நன்மைக்கே என்று ஏற்றுக்கொண்டு, நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
2. சில நேரங்களில் நாம் செய்யாத தவறுகளுக்காக சில தண்டனைகளை அனுபவிக்கூடும். அதுதான் கர்மவினையின் விதி. அவ்வாறு இக்கட்டான நிலையில் இருக்கின்ற நேரத்தில் யாரையும் திட்டாமல், சாபமிடாமல் பிரச்சனைகளிலிருந்து நீங்கள் எவ்வளவு எளிதாக வெளிவர முடியும் என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
3. இங்கு ஒவ்வொருவரும் செய்யக்கூடிய நன்மை தீமைகளுக்கும் அவர்கள் கட்டாயம் ஒரு தக்க பலனை சந்தித்து விடுவார்கள். அந்த வகையில் ஒரு சிலர் தீயதை செய்து அவர்கள் பிற்காலங்களில் காலத்தால் வாட்டி வதைப்பதை நாம் பார்க்க முடியும்.

அந்த நேரத்தில் நாம் அவர்களை பார்த்து எந்த ஒரு விமர்சனமும் செய்யக்கூடாது. காரணம் அங்கு ஏற்கனவே கர்ம பலனை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை விமர்சனம் செய்து நாம் நம்முடைய பாவ கணக்கை இன்னும் அதிகரிக்க கூடிய கூடாது.
4. இங்கு மனிதர்களாகிய நமக்கு நம்முடைய கடமையை செய்வது மட்டுமே வேலையாகும். இங்கு யாரையும் யாரைப் பற்றியும் விமர்சிப்பதற்கு நமக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. நாம் ஒருவரைப் பற்றி தேவை இல்லாமல் விமர்சிக்கும் பொழுது நம்முடைய கர்ம பலனானது இன்னும் அதிகரிக்க தான் செய்யும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |