தாய் வழி தந்தை வழி குல தெய்வம் யாருக்கு முதலிடம்
குல தெய்வம் இவர்கள் நம் குலம் காக்கும் தெய்வம்.இவர்கள் அருள் இன்றி எந்த காரியமும் நம்மால் செய்யமுடியாது என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
அப்படியாக ஒருவர் வீட்டில இரண்டு குல தெய்வங்கள் இருக்கும்.அதாவது ஆண் பெண் இருவர் சேரும் உறவு தான் திருமண பந்தம்.இந்த பந்தத்தில் அவர்கள் இருவரும் இன்றி குடும்பம், தெய்வங்கள் , வாழ்க்கை முறை என அனைத்தும் இணைந்தாகவேண்டும்.
அப்படி இருக்க இந்திய கலாச்சார முறை படி ஒரு பெண் தான் திருமணம் முடித்து கணவன் வீட்டிற்கு சென்று அவள் வாழ வேண்டும்,அப்படியாக அந்த கணவன் காட்டிலும் மனைவி அவளின் வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டி இருக்கும்.
புது உறவுகள் மிக நெருங்கிய சொந்தங்கள் அகுவார்கள் அதே ஆணுக்கு நடந்தாலும் பெண்ணுக்கே நிறைய மாற்றங்கள் நடக்கும்.முக்கியமானதாக குல தெய்வ வழி பாடு இப்பொழுது இந்த பெண் அவள் தாய் வீட்டில் வளரும் பொழுது தந்தை வழி குல தெய்வம் பின்பற்றியிருப்பார்கள்.
மேலும்,வாழையடி வாழையாக திருமணம் ஆன உடன் கணவன் வீட்டு குல தெய்வத்தை தான் முதன்மை கொண்டு வணங்குவார்கள். அதற்காக பெண் வழி குல தெய்வம் வழிபட கூடாதா என்று கேட்டால் மனிதர்களுக்கு மட்டும் தான் பிரிவு மற்றும் மாற்றங்கள்.
தெய்வம் நம்மை எப்பொழுதும் பின் தொடர்ந்து தான் வருவார்கள் .அதிலும் குறிப்பாக பெண் குல தெய்வங்கள் அவர்கள திருமணம் ஆகி சென்றாலும் தான் கவனித்து கொண்டு இருக்கும் பெற்றோர்கள் போல்.
ஆக இருவர் குல தெய்வத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வழிபட குடும்பம் மேம்படும். தடங்கல் பிரச்சனைகள் இன்றி மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த தெய்வத்தின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |