குழந்தை பாக்கியம் கிடைக்க ஒருமுறை செல்ல வேண்டிய சக்தி வாய்ந்த 4 கோவில்கள்
இந்த உலகத்தில் தெய்வத்தின் அருள் இருந்தால் எதையும் சாதிக்கலாம். நடக்காது என்ற காரியம் கூட இறைவழிபாட்டால் சாத்தியமாகும். அப்படியாக மனிதர்கள் வாழ்க்கையில் குழந்தை பிறப்பு என்பது மிக முக்கியமானது. சிலருக்கு இந்த குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படுவதையும் நாம் பார்க்கலாம். அவர்கள் கட்டாயம் சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான நான்கு கோயில்கள் பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு . அந்தந்த கோவில்களுக்கு சென்று வரும் பொழுது நமக்கான மாற்றங்களை நாம் காணலாம். அப்படியாக குழந்தை பிறப்பில் தாமதம் சந்திப்பவர்கள் இந்த நாள் கோயிலுக்கு சென்று வர அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் பெறுவார்கள் என்கிறார்கள்.
1. கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் :
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கருகாவூரில் அமைந்துள்ளது இந்த கர்ப்பரட்சாம்பிகை கோவில். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் மருத்துவர்களால் கூட கைவிடப்பட்டவர்கள் இக் கோயிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்து அங்கு கொடுக்கும் பிரசாதமான நெய்யை வீட்டிற்கு வாங்கிச் சென்று 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அம்மனுடைய அருளால் நீங்கள் கேட்ட குழந்தை வரம் கிடைக்கும்.
2. குக்கே சுப்ரமணியர் கோவில் :
முருகர் ஆலயங்களில் குக்கே சுப்ரமணியர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். இங்கு குழந்தைக்காக காத்திருக்கும் கணவன் மனைவி இருவரும் சென்று சர்ப்ப சம்ஸ்ஹார பூஜை செய்து வழிபாடு செய்தால் முருகப்பெருமானுடைய அருளால் குழந்தை பிறக்கும். அதோடு ஜாதகத்தில் குழந்தை பிறப்பிற்கு தடையாக இருக்கும் நாக தோஷமும் விலகும். இங்கு உள்ள குமாரதாரா ஆற்றில் நீராடி இந்த பூஜையை செய்து மனதார வழிபட்டால் முருகப்பெருமானுடைய அருளால் விரைவில் குழந்தை பிறக்கும்.
3. மீனாட்சி அம்மன் :
மதுரையை ஆளும் அரசி மீனாட்சி. இவளை சென்று வழிபாடு செய்தால் வாழ்க்கையில் கிடைக்காத வரமே இல்ல. முன்னொரு காலத்தில் மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னனுக்கு நீண்ட வருடங்களாக குழந்தை இல்லை. அவருடைய கவலையை போக்க அன்னை பராசக்தி மகளாக அவதரித்த தலம் தான் இது. பாண்டிய மன்னன் தவம் இருந்து பெற்ற தெய்வம் மீனாட்சி. ஆதலால் மீனாட்சி அம்மனை சென்று மனம் உருகி கேட்கும் எதுவும் அவள் நடத்திக் கொடுக்கின்றாள்.
4. சந்தான வேணுகோபால சுவாமி கோவில் :
கர்நாடகாவில் இருக்கும் மிகவும் பழமை வாய்ந்த கோவிலில் சந்தான வேணுகோபால சுவாமி கோவில் ஒன்று. கோவிலுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். அதிலும் குறிப்பாக குழந்தை வரம் வேண்டி வரும் பகதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வந்து குழந்தை கிருஷ்ணனுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தால் குழந்தையாக கண்ணனே பிறப்பார் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷம் விலகுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







