தமிழ் புத்தாண்டில் ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள்
ஏப்ரல் 14ம் திகதி சித்திரை மாதத்தின் முதல் நாளான குரோதி ஆண்டு பிறக்கிறது.
60 தமிழ் ஆண்டுகளில் 38வது ஆண்டாக குரோதி ஆண்டு பிறக்கிறது,
"கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க
அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே
சொற்பவிளையுண்டெனவே சொல்”
இடைக்காட்டார்
குரோதி ஆண்டில் மழை குறைவாக இருக்கும் என்றும், அதிகமாக திருடு போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் கடவுள் மீதான நம்பிக்கை குறையவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரோதி ஆண்டில் பல கிரகங்களில் மாற்றம் உண்டாகும், கிரகங்களின் பெயர்ச்சி ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவில் குரோதி தமிழ் ஆண்டால் ராஜயேகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
குரோதி ஆண்டில் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தப்போகிறது, நீங்கள் வெகுநாட்களாக வேலைகள் முடிவடையும், பதவி உயர்வு கிடைக்கும், இதனால் வருமானம் அதிகரிக்கும், எனினும் பண வி்டயத்தில் கவனமாக இருக்கவும்.
தொழில் செய்பவராக இருந்தால் முன்னேற்றம் உண்டு, உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.
நினைத்தவுடனே குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு வரவும், பூர்விக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையலாம்.
மிதுனம்
உங்கள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வரப்போகிறது குரோதி ஆண்டு, தடைபட்டு கிடந்த காரியங்கள் முற்றுப்பெறும், முதலீடுகளில் லாபம அதிகரிக்கும், பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும், வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
கணவன்- மனைவி இடையே அன்பு அதிகரிக்கும், பிள்ளைகள் நல்ல செய்தியை கொண்டு வரலாம், குடும்பத்தில் அமைதியான சந்தோஷமான சூழல் நிலவும்.
பெற்றோரின் ஆதரவு உண்டு, வீட்டில் சுப காரியங்கள் நடக்கும், ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
கடகம்
கடன் சிக்கல்கள் நீங்கி சிறப்பான பலன்களை கொடுக்கப்போகிறது தமிழ் புத்தாண்டு, பணியிடத்தில் சிக்கல்கள் நீங்கும், இழுபறியில் இருந்த காரியம் முடிவடையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், கணவன்- மனைவி இடையே அன்பு அதிகமாகும், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக பேசவும்.
சிம்மம்
குரோதி ஆண்டில் புதிதாக வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அமையும், கடன் தொல்லைகள் நிவர்த்தி அடையும், சம்பள உயர்வு உண்டு.
எனினும் வீண் செலவுகள் வரலாம், சிக்கனமாக இருக்கவும், தேவையற்ற செலவுகளை தவிர்த்துவிடுங்கள்.
வரன் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்.