2026: நவம்பர் 22 முதல் புதிய திருப்பம்.. சுக்கிர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் ராசிகள்
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் தான் செல்வம், ஆடம்பரம், காதல் கலை, அழகு மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு காரணியாக விளங்குகிறார். மேலும், ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் இருக்கின்ற நிலையை பொறுத்து அவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஆடம்பர வசதிகள் ஆகியவை அமைகிறது.
அப்படியாக, சுக்கிர பகவான் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். அவர் நவம்பர் 22 2026 அன்று அவருடைய சொந்த வீடான துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார். அவர் தொடர்ந்து ஜனவரி 1. 2027 தேதி வரையிலும் சுக்கிரன் துலாம் ராசியில் இருக்கிறார்.
சுக்ரன் உடைய இந்த சொந்த ராசி பயணம் 12 ராசிகளுக்கும் பல்வேறு தாக்கங்களை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய அளவில் நன்மையை பெறுகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் இடமாற்றம் தொழில் ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. நீண்ட நாள் முயற்சிகளுக்கு ஏற்ப அங்கீகாரத்தை பெறுவீர்கள். வேலையில் உயர் அதிகாரிகள் உடைய ஒத்துழைப்பை பெறுவீர்கள்.
நீண்ட நாட்களாக வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். எதிர்கால இலக்குகளை நோக்கி பயணத்தை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி அன்பர்களுக்கு சுக்கிர பகவானுடைய இந்த இடமாற்றமானது இவர்களுக்கு பொருளாதார ரீதியாக நிறைய முன்னேற்றங்களை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. நீண்ட நாட்கள் மேற்கொள்ள நினைத்த பயணம் விரைவில் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய வேலைகளில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நெருக்கடிகள் விலகி உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு வசதி வாய்ப்புகள் உருவாகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானுடைய இந்த இடமாற்றமானது இவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு நல்ல தோற்றமும் ஆளுமையையும் நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வந்து சேர்க்கப்போகிறது.
வேலை செய்யக்கூடிய இடங்களில் இவர்களுடைய திறமைக்கு ஏற்ப அங்கீகாரமும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகளை தேடிக்கொள்வீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மாற்றங்களும் காத்திருக்கிறது.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |