கும்ப ராசிக்காரர்களுக்கு எந்த நட்சத்திரம் பொருத்தம்? யாருடன் பழகினால் அதிர்ஷ்டம் பெருகும்?
சனிபகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற கும்ப ராசியினர் வாழ்க்கையில் எதையும் புது விதமாக யோசித்து செயல்படக்கூடியவர்கள்.
அப்படியாக, கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் சில நட்சத்திரங்களும் பொருத்தமானதாகவும், சில நட்சத்திரம் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகவும் இருக்கிறது. அந்த வகையில், அவர்களுக்கு யார் மிகவும் பலம்? பலவீனம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
அவிட்டம்:
கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருவாதிரை, பூசம், சுவாதி, அனுஷம் ஆகிய நட்சத்திரங்கள் நல்ல பலன்களை கொடுப்பதாக சொல்லப்படுகிறது. பரணி, பூரம் மற்றும் பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் இவர்கள் மனக்கசப்புகளை கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

சதயம்:
கும்ப ராசியில் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புனர்பூசம், விசாகம் பூரட்டாதி ஆகியவை நல்ல பணவரவை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. கார்த்திகை மற்றும் உத்திராடம் நட்சத்திரங்கள் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
பூரட்டாதி:
கும்ப ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அஸ்வினி, பூசம், அனுஷம், மூலம் மற்றும் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இவர்களுக்கு ஒரு நல்ல பொருளாதார முன்னேற்றத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.
ரோகிணி, ஹஸ்தம் மற்றும் திருவோணம் நட்சத்திரக்காரர்களுடன் பழகும் பொழுது இவர்கள் சற்று கவனமாக பழக வேண்டும், இல்லை என்றால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் இது பொதுவாக சொல்லப்பட்ட பலன் என்றாலும் ஒவ்வொருவர் தனிப்பட்ட ஜாதகத்திற்கு ஏற்பவும் அவர்களுக்கு அமைந்திருக்கக்கூடிய கிரக நிலைகளுக்கு ஏற்பவும் பலன்கள் மாறுபடலாம் என்றும் பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள். அதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |