மீண்டும் மீண்டு வரும் மீனம்.. இவர்களின் பலம் பலவீனம் என்ன? அதிர்ஷ்டம் காலம் எப்பொழுது?

By Sakthi Raj Jul 11, 2026 06:09 AM GMT
Report

 12 ராசிகளில் 12 வது ராசியாக வரும் மீனம் ராசியினர் குருவின் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர்கள் ஒருவரை வழி நடத்துவதில் சிறந்தவராக இருப்பார்கள். அப்படியாகி மீன ராசியில் பிறந்தவர்களின் குணம் மற்றும் அவர்களுக்கு எப்பொழுது கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலே கலை ரசனை உடையவர்கள் இசையில் அதிகம் ஆர்வம் உடையவர்கள். இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாகவும், நேர்த்தியாகவும் இருக்கக்கூடியவர்கள். பொதுவாக இவர்களுக்கு வாழ்க்கையில் இவர்களுக்கு எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அதில் இருந்து மீண்டு வரக்கூடியவர்கள்.

இவர்கள் பார்ப்பதற்கு எப்பொழுதும் புன்னகையுடனும் சுறுசுறுப்பாகவும் இருக்கக்கூடியவர்கள். அதேபோல், ருசியான உணவுகளை சுவைப்பதில் சிறந்தவர்கள். அதேபோல் சமைப்பதும் இவர்களுக்கு பிடித்தமான ஒன்று.

சனிக்கிழமை தவறியும் செய்யக்கூடாத 7 விஷயங்கள்.. மீறினால் கடும் பாதிப்பு உண்டாகுமாம்

சனிக்கிழமை தவறியும் செய்யக்கூடாத 7 விஷயங்கள்.. மீறினால் கடும் பாதிப்பு உண்டாகுமாம்

அதேபோல், மீன லக்கினத்தில் பிறந்தவர்கள் உணவு, ஆடை தொழில், ஆடை அலங்காரம், சினிமா துறை, மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தையும் பெயரையும் பெற்றுக்கொடுக்கும்.

அதனுடன், இவர்களுக்கு மருந்து விற்பனை போன்ற தொழில் நல்ல சிறப்புகளை கொடுக்கும். இருப்பினும் இவர்கள் உடன் பிறந்தவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சொத்து விவகாரம் அல்லது பண விவாகரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இதனால் உறவில் விரிசல் உண்டாகும். இவர்களுக்கு செவ்வாய் தசாபுத்தி மற்றும் சந்திரன், புதன், குரு ஆகியவை சிறப்பான பலன்களை கொடுக்கும். இவர்கள் சுக்கிரன் திசை காலகட்டங்களில் பணம் மற்றும் பெண்கள் விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவர்களுக்கு குலதெய்வ வழிபாடு கூடுதல் சிறப்பை கொடுக்கும். அதோடு சாந்தமான பேணா தெய்வங்களும் கிராம தெய்வங்களும் இவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US