நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்

By Sakthi Raj Jul 19, 2026 11:49 AM GMT
Report

ஜோதிடத்தில் சூரிய பகவானுடைய வீட்டை சொந்தமாக கொண்ட சிம்ம ராசியினர் எப்பொழுதும் ஆளுமையாக விளங்க கூடியவர்கள். ஆனால்,, சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனிபகவானுடைய ஒரு பாடம் இருக்கிறது.

அதாவது, சிம்ம லக்னம் அல்லது சிம்ம ராசிக்கு சனியின் பாவத்துவம் அமைந்திருப்பதால் இவர்கள் புத்திசாலி அற்ற குடும்ப தலைவன் என்று பெயர் எடுக்க கூடலாம். இவர்களுடைய வாழ்க்கை பெரும்பாலும் குடும்பத் தலைவியால் மட்டுமே உயரக்கூடிய நிலைமை வருகிறது.

இவர்கள் வாழ்க்கை பெரும்பாலும் மனைவியின் துணையால் மட்டுமே உயர்ந்த நிலைக்கு செல்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் சிம்மம் என்பது சூரிய பகவானுடைய வீடு, தலைமை, கவுரவம் சுயமரியாதை, ஆணவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறது.

நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள் | Life Prediction Of People Born On Leo Zodiac

பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்

பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்

இந்த அமைப்பில் சனிபகவான் கடுமையாக செயல்பட்டால் தான் வைத்ததே சட்டம் என்றும் பிறருடைய அறிவுரையை கேட்க மறுக்கக் கூடிய குணமும் பிறக்கிறது. மேலும், குடும்பத்தை காப்பாற்றும் சக்தியாக இந்த இடத்தில் மனைவி மாறுகிறார்.

குடும்பத்தை இவர்கள்தான் ஒற்றுமையாக வைத்திருப்பதும், பொருளாதாரத்தை மேம்பட உயர்த்துவதும் உறவுகளை பாதுகாத்து பேணுவதும் மனைவியாகவே இருக்கிறார்கள். ஆதலால், ஊர் போற்றும் வகையில் இவர்களுடைய குடும்பம் இந்த நபர் மனைவி வந்து பிறகு உயர்ந்த நிலைக்கு சென்றார் என்று பெயர் எடுத்து விடுகிறார்.

நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள் | Life Prediction Of People Born On Leo Zodiac

12 ராசிகளின் நிஜமான கேரக்டர் இதுதானாம்... என்ன தெரியுமா?

12 ராசிகளின் நிஜமான கேரக்டர் இதுதானாம்... என்ன தெரியுமா?

இவர்கள் ஆரம்ப காலகட்டங்களில் மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்காமல் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், எப்பொழுது இவர்கள் மனைவியின் பேச்சை மெதுவாக கேட்கத் தொடங்குகிறார்களோ அப்பொழுது இருந்து அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும் நல்ல முன்னேற்றம் பெறக்கூடியதாகவும் அமைகிறது. அதே போல், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையோடும் இவர்கள் வாழ்கிறார்கள்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US