4,13,22, 31 ஆகிய தேதியில் பிறந்தவர்களின் வாழ்க்கை குணம் எப்படி இருக்கும் தெரியுமா ?

Report

 ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த எண் கணிதத்தை வைத்தும் நாம் ஒருவருடைய எதிர்கால வாழ்க்கை அவர்களுடைய குணநலன் தொழில் மற்றும் தங்களுடைய வாழ்க்கை துணை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படியாக, 4 ,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் இந்த 4 என்ற எண்களில் பிறந்தவர்களுக்கு ராகுபகவானின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்.

ஆதலால், இவர்கள் எதையும் ரொம்ப பிரம்மாண்டமாக சிந்திக்க கூடிய ஆற்றல் உடையவர்கள். அது பல நேரங்களில் நடைமுறைக்கு ஏற்றவாறு இருப்பதில்லை.

அதைப்போல் 13 என்ற தேதியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் சில சவால்கள் வந்தாலும் அவர்கள் மிகவும் ஜாலியாக எல்லா விஷயங்களையும் எடுத்துக் கொள்வது உண்டு மிகவும் கவலை கொள்ள மாட்டார்கள்.

உருவாகும் கேந்திர திரிகோண யோகம்.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

உருவாகும் கேந்திர திரிகோண யோகம்.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

எண் 22 தேதியில் பிறந்தவர்கள் சந்திர பகவானுடைய ஆதிக்கத்தை பெற்றவர்கள். ஆதலால் இவர்களிடம் மன உறுதி அதிகம் இருக்கும். தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதோடு இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு கான்ட்ராக்ட் வேலைகள், மீடியா தொடர்பான துறைகள் மிகச் சிறப்பாக அமையும். அதேபோல், இவர்கள் தவிர்க்க வேண்டிய நிறமாக கருப்பு மற்றும் கரு நீல நிறங்கள் இருக்கிறது.

இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு ராகு பகவானின் ஆதிக்கம் இருப்பதால் இவர்கள் துர்க்கை அம்மன் வழிபாடு, காலபைரவர் வழிபாடு, சர்ப்ப தேவதைகள் வழிபாடு செய்வது சிறப்பு பலன்களை தரும்.

கோமேதகம் போன்ற ரத்தினங்களை எந்த ஒரு ஜாதக ஆலோசனை இல்லாமல் அணிவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், இந்த எண்களில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 


 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US