நீங்கள் விருச்சிக ராசியில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்நாள் கர்ம பலன் என்ன தெரியுமா?
செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற விருச்சிக ராசியினர் எப்பொழுதும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு இருப்பார்கள். அதை போல் அவர்கள் அமானுஷ்ய உணர்வு கொண்டவர்கள். ஒரு இடத்தில் இருக்க கூடிய நல்ல மற்றும் கெட்ட அதிர்வலைகளை அவர்கள் உடனடியாக உணரக்கூடிய தன்மையை இயற்கையாகவே பெற்றிருப்பார்கள்.
அதேபோல் இவர்கள் கோவில் மற்றும் குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்ளும் பொழுது அவர்கள் நினைத்த வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றுவது அவசியமாகும். இல்லையென்றால் அதுவே அவர்களுக்கு பிற்காலங்களில் கர்ம பலனை அதிகரித்து விடும். விருச்சிக ராசியினர் தொழில் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது அவர்கள் சிறந்த நிர்வாகிகளாக செயல்படுகிறார்கள்.
நிதி மற்றும் மக்கள் மேலாண்மை தொடர்பான துறைகளில் இவர்கள் சிறந்த எதிர்காலம் உண்டு. அதேபோல் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். விருச்சிக ராசியின் கூடப்பிறந்தவர்களால் இவர்களுக்கு எப்பொழுதும் அதிக அளவில் நன்மைகள் கிடைப்பதில்லை.
இவர்களுடைய தாயாரின் வாழ்க்கை எப்பொழுதும் போராட்டம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இவர்கள் திருமண வாழ்க்கை தொடக்கத்தில் சில மன கசப்புகளை கொண்டிருந்தாலும் 15 வருடங்கள் இவர்கள் காத்திருந்தால் தான் இவர்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழக்கூடிய நிலையை பெறுகிறார்கள்.
இவர்கள் ஒருவருக்கு வாக்குறுதிகள் கொடுக்கும் போது அதிக அளவில் யோசிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. மேலும், விருச்சிக ராசியினரின் வாழ்க்கை கர்ம பலன் குறைய குரு பகவானை வழிபாடு செய்வதும் சந்திர பகவானை வழிபாடு செய்வதும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் இவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
மேலும், இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்துகொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |