மகாபாரதத்திற்கும் நவரகிரகங்களுக்கும் இருக்கும் தொடர்புகள்
நவகிரகங்கள் என்பது 9 கிரகங்களை குறிக்க கூடியது. இந்த 9 கிரகங்களும் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே போல் அகிலம் போற்றும் மகா பாரதத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்பது கதாபாத்திரம் இருக்கிறது.
மேலும், இவர்களுக்கும் நவகிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த ஒன்பது நபர்களும் ஒன்பது குணாதிசயம் கொண்டவர்கள். அப்படியாக, நவகிரகங்களுடன் தொடர்பு கொண்ட மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் பற்றி பார்ப்போம்.
1. குரு: ஜோதிடத்தில் குரு என்பது நிதி நேர்மை, தர்மம் போன்ற பண்புகளை குறிக்கிறது. மகா பாரதத்தில் தருமர் குருவின் அம்சமாக திகழ்கிறார்.
2. செவ்வாய்: அர்ஜுனன் செவ்வாய் கிரகத்தின் அம்சமாக திகழ்கிறார். காரணம், செவ்வாய் கிரகம் வீரம், போர், ஆயுதம் குறிக்கூடிய கிரகம். அர்ஜுனன் மகா பாரதத்தில் போரில் சிறந்து விளங்கினான்.
3. சூரியனின்: கர்ணன் சூரியனின் அம்சமாக பார்க்கப்படுகிறார். சூரியனைப் போலக் கொடையாளி, கர்ம வீரன்.
4. சந்திரன்: சந்திரனின் அம்சமாக இருப்பவர் கண்ணன். சந்திரனின் அழகை பெற்றவனாக இருந்தார்.
5. புதன்: படிப்பு மற்றும் அறிவுக்குரிய கிரகம் புதன். புதனின் அம்சமாக விளங்கியவர் சகாதேவன். ஜோதிடம், கணிதம் ஆகியவற்றை அறிந்தவனாக இருந்தான்.
6. கேது: பிறர் நோய்களை குண படுத்த கூடிய தன்மை கொண்டது. கேதுவின் அம்சமாக விளங்கியவன் நகுலன்.
7. சனி: சகுனி தான் சனியின் அம்சமாக திகழ்கிறார்.
8. சுக்கிரன்: சபாஞ்சாலி தான் சுக்கிரனின் அம்சமாக இருக்கிறாள். ஆதலால் தான் 5 கணவர்கள் பெற்று இருந்தால்.
9. ராகு: பழிக்கு பழி வாங்கும் குணம் கொண்டது. ராகுவின் அம்சமாக விளங்கியவர் துரியோதனன். அவனை பார்த்து சிரித்த பாஞ்சாலியை பழி வாங்க சபை நடுவே பாஞ்சாலியின் துகிலை உரித்தான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |