சுவாமி ஐயப்பனுக்கு மிகவும் பிடித்த 5 பொருட்கள் என்னென்ன தெரியுமா?
கார்த்திகை மாதம் முழுவதும் சுவாமி ஐயப்பன் வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், சுவாமி ஐயப்பன் ஏழைப்பங்காளன் என்று அழைப்பார்கள். காரணம், அவர் ஆடம்பரமான வழிபாடுகள் அல்லாமல் மனதார ஒருவர் தன்னை நினைத்து நம்பிக்கையுடன் பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு ஓடோடி வந்து எளிமையாக அருள்பாலிக்க கூடிய ஒருவராக இருக்கிறார்.
அதனால் அவருக்கு இந்த திருநாமம் உண்டாயிற்று. அவரை வழிபாடு செய்யக்கூடியவர்கள் அவருக்கு எளிமையான பொருட்களை கொண்டு நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம். அப்படியாக, சுவாமி ஐயப்பனுக்கு மிகவும் பிடித்தமான பொருட்களை பற்றி பார்ப்போம்.

சுவாமி ஐயப்பனுக்கு விருப்பமான பொருட்கள் :
1. பிடித்த பழங்கள் - வாழைப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம்
2. பிடித்த நைவேத்தியங்கள் - அரவணை பாயசம், அப்பம், அவல், பொரி, அப்பசம், திருமதுரம், இடித்துப் பிழிந்த பாயசம்.
3. பிடித்த நிறங்கள் - கருப்பு, நீலம், காவி
4. பிடித்த மலர்கள் - துளசி, அரளிப்பூ, செம்பருத்தி, மல்லிகை, தாமரை மலர்கள், நீலச் சங்குப்பூ
5. பிடித்த அபிஷேகங்கள் - நெய், பால், தேன், இளநீர், சந்தனம்
சபரிமலையில் ஐயப்பனுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்கள் :
அரவணைப் பாயசம்:
சபரிமலையில் முதன்மையாக படைக்கக்கூடிய பிரசாதம் ஆகும். இதில் வெல்லம், நெய், ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து தயாரிக்கிறார்கள்.
உண்ணியப்பம் :
இதில் அரிசி மாவு, வாழைப்பழம், வெல்லம் மற்றும் நெய்யில் தயாரிக்க கூடிய ஒரு இனிப்பு பலகாரமாகும்.

திருமதுரம் :
இது அதிகாலை படைக்க கூடிய நெய்வேத்தியமாகும். கதலி வாழைப்பழம், தேன் மற்றும் கற்கண்டு (சர்க்கரை) கலந்து தயாரிக்கிறார்கள்.
இடித்துப் பிழிந்த பாயசம் :
உச்சிக்கால பூஜையில் படைக்கப்படுகிறது. இதில் தேங்காய் பால் கதலிப்பழம், சர்க்கரை, சுக்கு மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கிறார்கள்.
பானகம் மற்றும் பச்சரிசி சாதம்:
இரவு நேரப் பூஜையில் படைக்கப்படும் எளிய நைவேத்தியங்கள்.இவையெல்லாம் ஐயப்பனுக்கு பிடித்தமான நெய்வேத்தியமாகும்.
இவை எதுவுமே படைக்க முடியவில்லை என்றாலும் நீங்கள் வருத்தப்பட தேவையில்லை. மனதார சுவாமி ஐயப்பா என்கின்ற அவருடைய நாமத்தை பாராயணம் செய்து அவரை வழிபாடு செய்தாலே போதும் அவருடைய முழு பலன் நமக்கு கிடைக்கிறது.
Disclaimer:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |