2026: ராகு கேது பெயர்ச்சி: விருச்சிக ராசியினர் இந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்
2026 ஆம் ஆண்டிற்கான ராகு கேது பெயர்ச்சி டிசம்பர் 5ஆம் தேதி நடக்க இருக்கிறது. அந்த வகையில், செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
சில ஆண்டுகளாவே சற்று கடினமான காலங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் விருச்சிக ராசியினருக்கு இப்பொழுது அந்த கடினமான காலங்கள் விலகி ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான ஒரு அமைப்பு உருவாக போகிறது.
மாணவர்கள் கடினமான படிப்புகள் போன்றவற்றில் அவர்களுடைய கடினமான முயற்சியால் வெற்றி பெறப்போகிறார்கள்.
தொழில் ரீதியாக கூட்டு முயற்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இவர்களுக்கு நேர்மறையான மாற்றங்களும் சாதகமான பலன்கள் பெறப் போகிறார்கள்.

ஒரு சிலருக்கு கழுத்து மற்றும் முதுகு வலி, காது தொடர்பான உபாதைகள் ஆகியவை வரலாம். கவனமாக இருக்க வேண்டும். சுயமாக இந்த காலகட்டங்களில் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. தேவை இல்லாத சாகச பயணங்களை தவிர்த்து விடுங்கள்.
இந்த காலகட்டங்களில் வன்முறை சார்ந்த காட்சிகளை பார்ப்பதை குறைத்து மனதை அமைதியாக வைத்துக் கொள்வது அவசியம்.
முடிந்தவரை இவர்கள் இந்த காலகட்டங்களில் பச்சை நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது. இந்த பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலக திருத்தணி முருகப்பெருமான் வழிபாடு செய்வது மிக சிறந்த பலன்களை தீய தாக்கங்களையும் குறைக்கக்கூடும்.
மேலும், ராகு கேது பெயர்ச்சி விருச்சிக ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |