வாழ்க்கையில் தொடர்ந்து தடைகளா? விநாயகருக்கு இந்த ஒரு பரிகாரம் செய்து பாருங்கள்
இந்து மத வழிபாடுகளில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது நமக்கு மிகப்பெரிய அளவில் நல்ல பலன்களை கொடுக்கும். அப்படியாக, நாம் விநாயகப் பெருமானுக்கு எந்த எண்ணிக்கையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.
11 தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு விரைவில் திருமணம் நடக்கிறது.
9 தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்ற பொழுது விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
7 தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்ற பொழுது கடன் தொல்லை விலகுகிறது.

5 தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்ற பொழுது சிறந்த கல்வியை பெறுகின்றோம்.
3 தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்ற பொழுது உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அதை போல் நாம் தொழிலில் வளர்ச்சி அடைவதற்கும் 3 தேங்காய் உடைத்து விநாயகர் வழிபாடு செய்யலாம்.
1 தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் தடைகளும் துன்பங்களும் விலகி மன அமைதி கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |