விதியை மாற்றும் முருகப்பெருமானின் 8 ஆம் படை வீடு.. எங்கு இருக்கிறது தெரியுமா?
சென்னை திருவல்லிக்கேணியில் முருகப்பெருமானின் எட்டாம் படை வீடான கந்தசாமி கோயில் அமைந்திருக்கிறது. இங்கு சென்று ஒருவர் வழிபாடு செய்தால் அவர்களின் தலை எழுத்து மாறும் என்று சொல்லப்படுகிறது.
அதிலும் குறிப்பாக வைகாசி விசாகத்தன்று குரு ஓரைகயில் ஒருவர் இங்கு சென்று வழிபாடு செய்தால் அவர்களுக்கு நீண்ட நாள் குழந்தை இல்லாத பிரச்சனை தீர்வுக்கு வரும் என்றும் சொல்கிறார்கள். மேலும் திருப்போரூருக்கு காவடி எடுத்து செல்கின்ற முருக பக்தர்கள் இங்கு தங்கி இருந்து செல்லும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்த கோயில் மிகவும் பழமையானது. இந்த கோயில் கட்டுமானத்திற்காக பச்சையம்மாள் என்கின்ற ஒரு பெண் நிலத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். இந்த கோவிலில் உள் பிரகாரத்தில் பிள்ளையார், வடக்கு முகமாக ஸ்ரீ கல்யாண கனக துர்க்கை, சப்த மாதர் எனப்படும் ஏழு கண்ணியர்கள் தெற்கு முகமாக தக்ஷிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் இருக்கிறது.
இங்கு முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் மேற்கு பார்த்த நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இங்கு ஆலயத்தில் ஈசானிய மூலையில் கும்பேஸ்வரரும், அக்னி மூலையில் மங்களாம்பிகையும், வாயு மூலையில் நவகிரக சன்னதிகளும் அதை அடுத்து பெரிய அரச மரமும் அமைந்திருக்கிறது.
வாழ்க்கையில் ஒருவருக்கு தீராத பிரச்சினைகள் இருக்கிறது என்றால் நிச்சயம் இந்த கோவிலுக்கு வந்து இங்கு இருக்கக்கூடிய முருகப்பெருமானை தரிசனம் செய்தால் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய எல்லா பிரச்சனைகளும் தீரும் என்றும் பக்தர்கள் அவர்களுடைய அனுபவத்தின் வழியாக நமக்கு சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |