யாருக்கு எந்த நிறம் அதிர்ஷ்டம்.. எந்த நாளில் அணிந்தால் வெற்றிகள் தேடி வரும்.

By Sakthi Raj Jun 26, 2026 09:09 AM GMT
Report

 ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு பின்னணி இருக்கிறது. அதாவது ஒருவருக்கு சுக்கிர பகவானால் தோஷம் இருக்கிறது என்றால் அவர்கள் அதற்குரிய நிறத்தை அணிகின்ற பொழுது அந்த தோஷத்தின் விளைவானது குறைகிறது.

அதேபோல் ஒருவருக்கு புதன் பகவானால் பிரச்சனை இருக்கிறது என்றால் அவர்கள் அதற்குரிய நிறத்தை அணிகின்ற பொழுது அவர்கள் அந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுகிறார்கள்.

அந்த வகையில், ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்புகளுக்கு ஏற்ப அவர்கள் எந்த நிறம் அணிய வேண்டும் மற்றும் எந்த நிறத்தை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஜோதிடத்தில் ஒவ்வொரு நிறமும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் கதிர்வீச்சை ஈர்க்கக்கூடிய தன்மையை பெற்றிருக்கிறது. உதாரணமாக திங்கட்கிழமை வெள்ளை நிறம் அணிகின்ற பொழுது சந்திரபாபுனுடைய ஆற்றலை பெறக்கூடிய தன்மையை பெற உதவுகிறது.

அதேபோல், செவ்வாய் கிரகத்திற்கு உரிய சிவப்பு நிறமும் குரு பகவானுக்குரிய மஞ்சள் நிறமும் நமக்கு அந்த தினத்தில் அணிகின்ற பொழுது நமக்கு வெற்றியை கிடைக்கிறது.

மகர ராசியினருக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. ஜூலை மாதம் கட்டாயம் இது நடக்குமாம்

மகர ராசியினருக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. ஜூலை மாதம் கட்டாயம் இது நடக்குமாம்

அதைப்போல், பேச்சாற்றல் குறிக்கக்கூடிய கிரகமாக புதன் மற்றும் ஒருவருடைய சுகபோக வாழ்க்கையை குறிக்கக்கூடிய சுக்கிர பகவான் இவர்களுக்கு ஏற்ற நிறத்தை அணிகின்ற பொழுது நான் தடையின்றி சில விஷயங்களை செய்வதற்கு அவர்கள் உதவியாக இருக்கிறார்கள்.

அதைப்போல் ஒரு நிறுவனத்திற்காக நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய லோகோ என்று சொல்லப்படும் அந்த கம்பெனியின் அடையாளமும் நாம் சரியான நிறங்கள் தேர்ந்தெடுத்து வைப்பது நன்மையை தரும்.

அதாவது, அந்த உரிமையாளரின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் கிரக அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேலும், மன அழுத்தம் மன குழப்பங்களில் இருப்பவர்கள் சுக்கிர பகவானுடைய ஆற்றலை பெற வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு போன்ற நிறங்களை பயன்படுத்துவது சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

அதோடு, ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் அமைப்புக்கு ஏற்ப எந்த நிறம் அணிய வேண்டும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.    


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US