வெற்றிகள் குவிய வாரத்தில் 7 நாட்கள் அணிய வேண்டிய அதிர்ஷ்ட நிறங்கள்
மனிதனுக்கும் நிறங்களுக்கு எப்பொழுதும் ஒருவகையான தொடர்புகள் உண்டு.அதாவது நிறங்கள் பொறுத்து நம்முடைய மனநிலையில் மாற்றமும்,அன்றைய நாளும் அமையும் என்றால் நம்பமுடிகிறதா?ஆனால் அவை தவிர்க்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது.நிறங்கள் மனிதனிடம் பேசும் தன்மை கொண்டது.அதோடு ஒவ்வொரு நிறமும் இறைவழிபாட்டுடன் தொடர்புடையது.
ஆகையால் தான்,நமக்கு நேரம் சரி இல்லாத காலங்களில் ஜோதிடர்கள் அந்த காலத்தை வென்றிட அதற்குரிய நிறங்களை அணிய பரிந்துரைக்கிறார்கள்.அப்படியாக,ஒரு மனிதன் அவன் ஒவ்வொரு நாளும் நிதானமாக வாழவும்,செய்யும் செயல்களில் வெற்றிகள் கிடைக்கவும் அணிய வேண்டிய அதிர்ஷ்ட நிறங்கள் பற்றி பார்ப்போம்.
ஞாயிற்றுக் கிழமை:
ஞாயிற்று கிழமை சூரிய பகவான் வழிபாட்டிற்குரியது.அன்றைய நாளில் சூரிய பகவான் ஆதிக்கம் அதிகம் காணப்படும்.அப்படியாக சூரியனின் நிறமாக செம்மஞ்சள் உள்ளது.அன்றைய தினத்தில் நாம் மஞ்சள் நிற ஆடைகள் அணிய மனதில் தன்னம்பிக்கை வளரும்.காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும்.
திங்கள் கிழமை:
திங்கள் என்பது சந்திர பகவானின் தமிழ் பெயர்.அன்றைய தினத்தில் சந்திரனின் மனம் குளிர வெள்ளை நிறத்தில் ஆடை அணியலாம்.அவ்வாறு அணியும் பொழுது நமக்கு நிதானமும் எதையும் பக்குவமாக கையாளும் திறனும் கிடைக்கிறது.
செவ்வாய்கிழமை:
நாம் அனைவரும் அறிந்தது செவ்வாய் முருகப்பெருமானுக்கும் அங்காரகன் வழிபாட்டிற்கு உரியது என்று.ஆக அன்றைய தினத்தில் அங்காரகனுக்கு பிடித்த சிவப்பு வண்ண உடை அணியலாம்.சிவப்பு நிறத்தில் ஒருவர் ஆடை அணிய அவர் மனஉறுதியோடு செயல்படுவார்கள்.
புதன் கிழமை:
பொதுவாக புதன் கிழமை அதிர்ஷ்ட தினமாக பார்க்கப்படுகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள்.அப்படியாக புதன் கடவுளுக்கு மிகவும் பிடித்த நிறமாக பச்சை நிறம் இருக்கிறது.ஒரு மனிதன் தொழில் மற்றும் படிப்பில் சிறந்து விளங்க அவனுக்கு புதன் பகவானின் அருள் நிச்சயம் வேண்டும்.ஆக புதன் கிழமை அன்று நாம் பச்சை நிறத்தில் ஆடை அணிய நமக்கு செய்யும் காரியங்களில் வெற்றிகள் குவியும்.
வியாழக்கிழமை:
வியாழக்கிழமை குரு ஆதிக்கம் மிகுந்த நாளாகும்.இந்த நாளில் பலரும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வார்கள்.அப்படியாக வியாழனுக்கு உகந்தது நிறமாக மஞ்சள் நிறம் உள்ளது.அன்றைய தினத்தில் மஞ்சள் நிற ஆடைகள் அணிய குருவின் அருள் கிடைக்கும்.
வெள்ளிக் கிழமை:
வெள்ளிக்கிழமை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.அன்றைய நாள் செல்வத்தின் கடவுளான ஶ்ரீலட்சுமி தேவி உகந்த நாளாகும்.மக்கள் பிற நாட்கள் கோயில் செல்லமுடியவில்லை என்றாலும் கட்டாயம் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்று விடுவார்கள். இந்த நாளில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிவது செல்வ செழிப்பை தருகிறது.
சனிக் கிழமை:
எல்லோரும் அறிந்தது சனிக்கிழமை சனிபகவான் வழிபாட்டிற்கும் உரியது என்று.சனிபகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளாக இருப்பதால் அன்று கருநீலம் மற்றும் கருப்பு நிற உடைகளை அணிந்தால் அவரது அருளைப் பெற்று கொடுக்கிறது. கருப்பு உடை அணிவதால் சனிபகவானின் தீவிரம் குறைந்து அருள்புரிகிறார்.ஆனால் சனிக்கிழமை அல்லாமல் பிற நாட்களில் கருப்பு நிற ஆடைகள் அணிவதை தவிர்ப்பது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |