மனக்கவலைகள் விலகி வெற்றியை தரும் 12 ராசிகளுக்கான அதிதேவதை வழிபாடு
ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு வகையான தனித்துவமான தன்மை உண்டு. அப்படியாக, 12 ராசிகளும் அவர்கள் மனக்கவலைகள் விலகி வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்க அவர்களுக்கு உரிய அதிதேவதை வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் வாழ்க்கை மிக சிறப்பாக அமைய செவ்வாய்கிழமைகளில் பழனி முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் நல்ல மாற்றத்தை பெறலாம்.
ரிஷபம்:
இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்து வந்தால் அவர்கள் வாழ்க்கை வளமாகும்.
மிதுனம்:
இவர்கள் புதன்கிழமைகளில் நின்ற கோலத்தில் அருள் புரியும் மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்தால் சிறந்த மாற்றத்தை பெறலாம்.
கடகம்:
இவர்கள் திங்கட்கிழமைகளில் கருமாரி அம்மன் அல்லது ஆதிபராசக்தியை வழிபாடு செய்தால் மன குழப்பங்கள் விலகும்.
சிம்மம்:
இவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பட்டூர் பிரம்மாவை வழிபாடு செய்தால் கடின காலங்கள் குறைந்து மகிழ்ச்சி கிடைக்கும்.
கன்னி:
இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மியை வழிபாடு செய்வது இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பொருளாதார சிக்கல்கள் விலகும்.
துலாம்:
இவர்கள் கூத்தனூர் சரஸ்வதி தேவியை எந்த நாட்களிலும் சென்று வழிபாடு செய்யலாம்.
விருச்சிகம்:
இவர்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஐயப்பனை சென்று வழிபாடு செய்வது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
தனுசு:
இவர்கள் எந்த நாளிலும் கோதண்டராமரை வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள் விலகும்.
மகரம்:
இவர்கள் சனிக்கிழமையில் அங்காள பரமேஸ்வரியை வழிபாடு செய்து வந்தால் மன பயம் பதட்டம் விலகும்.
கும்பம்:
இவர்கள் நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரியை சனிக்கிழமைகளில் வழிபாடு செய்து வந்தால் தடைகள் யாவும் விலகும்.
மீனம்:
இவர்கள் வீடுகளில் வியாழக்கிழமை தோறும் அன்னவாகன தேவியை வழிபாடு செய்து வந்தால் நல்ல மாற்றங்களை சந்திக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |