ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் இருக்கிறது. அப்படியாக 12 ராசிகளுக்கும் உரிய அதிர்ஷ்ட மூலிகைகள் என்னவென்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக கருந்துளசி இருக்கிறது. இவர்கள் செவ்வாய்க்கிழமை துளசி இலைகளை தண்ணீரில் போட்டு முகம் கழுவி வரும்பொழுது இவர்களுடைய கோபம் குறைகிறது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக வெட்டிவேர் இருக்கிறது. இவர்கள் வெட்டிவேர் தண்ணீர் குடித்து வரும் பொழுது வீண் செலவு குறைந்து பொருளாதாரம் நிலைத்து இருக்கிறது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக பிரம்மி இலை இருக்கிறது. இவர்கள் எழுதும் மேசையில் பிரம்மி பொடி வைத்தால் பேச்சாற்றல் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக அருகம்புல் இருக்கிறது. இவர்கள் திங்கட்கிழமை காலை அருகம்புல் தண்ணீரை தலைக்கு தெளித்து வந்தால் மனதில் இருக்கக்கூடிய பயம் விலகும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக எருக்கு இருக்கிறது. இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று எருக்கு இலை வழிபாடு செய்தால் சமுதாயத்தில் மரியாதையும் பதவி உயர்வும் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மூலிகையாக கீழாநெல்லி இருக்கிறது. இவர்கள் வாரம் இரண்டு முறை கீழாநெல்லி சாறு எடுத்து வர உடல் மற்றும் வேலை இவை இரண்டும் சீராகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக சந்தனம் இருக்கிறது. இவர்கள் வெள்ளிக்கிழமை சந்தனம் நெற்றியில் வைத்து வரும் பொழுது உறவில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் விலகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக வசம்பு இருக்கிறது. இவர்கள் வசம்பை தலையணை அருகில் வைத்தால் எதிரி பயம் மற்றும் தடைகள் யாவும் விலகும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட மூலிகையாக வில்வம் இருக்கிறது. இவர்கள் வியாழன் அன்று வில்வ இலை கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்தால் அதிர்ஷ்ட பலன் கொடுக்கிறது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக கரிசிலாங்கண்ணி இருக்கிறது. இவர்கள் கரிசலாங்கண்ணிக் கீரை வாரம் ஒரு முறை எடுத்து வரும் பொழுது சனி தோஷம் நீங்குகிறது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட மூலிகையாக தூதுவளை இருக்கிறது. இவர்கள் தூதுவளை கசாயம் குடித்து வரும் பொழுது திடீர் நோய் மற்றும் தடைகள் யாவும் விலகும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட மூலிகையாக தாமரை விதை அல்லது இலை இருக்கிறது. இவர்கள் வெள்ளிக்கிழமை தாமரை இலை கொண்டு பெருமாளை வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |