சனி பகவானை விடவும் மிகவும் மோசமான கிரகம் எது தெரியுமா?
ஜோதிடத்தில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் இருக்கிறார். மேலும், இவரை கர்ம காரகன் என்று அழைப்பார்கள். அது மட்டுமல்லாமல் சனி பகவான் மிகவும் மோசமான கிரகமாகவும் அவர் நமக்கு மிகப்பெரிய அளவில் ஆபத்தையும் சிக்கல்களையும் கொடுப்பார் என்று தான் பலரும் நம்புகிறார்கள்.
ஆனால் உண்மையில் சனி பகவான் கொடுக்கின்ற துன்பங்கள் யாவும் நம்மை திருத்திக் கொண்டு மென்மேலும் நல்ல மனிதராக மாற்றுவதற்காக மட்டுமாகவே இருக்குமே தவிர அவர் எந்த ஒரு மனிதனையும் தவறு செய்யாமல் துன்புறுத்துவதற்கு இறங்குவதில்லை. ஆக ஜோதிடத்தில் சனி பகவான் தான் மிகவும் மோசமான கிரகம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் சனி பகவானை விடவும் மிகவும் மோசமான கிரகம் ஒன்று இருக்கிறது. அவர் தான் புதன் பகவான். காரணம் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இல்லை என்றால் அந்த ஜாதகர் மன நோயால் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
அதாவது பதட்டம், படபடப்பு, தேவை இல்லாத சிந்தனை, படிப்பில் மந்தம், தோல் தொற்று நோய், அதைப்போல் வைட்டமின் டி, வைட்டமின் கே, குறைபாடுகள் மற்றும் ஞாபக மறதி போன்றவை புதன் நல்ல நிலையில் இல்லை என்றால் அந்த ஜாதகர் இதெல்லாம் அனுபவிக்க கூடிய நிலையை கொடுக்கிறது.

மேலும், புதன் ஜாதகத்தில் கெட்டு இருந்தால் அந்த நபர் தனிமை விரும்பி ஆகவும் வீட்டுக்குள் கதவை பூட்டி கொண்டு இருக்கக்கூடிய எண்ணங்களை கொண்டவராகவும், பல நேரங்களில் கனவு உலகில் இருப்பதை நாம் காணலாம்.
அதாவது ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு அது நிஜம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்க கூடிய அமைப்பும் இந்த புதன் கெட்டு இருந்தால் நடக்கும்.
இவ்வாறு புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் கெட்டு இருந்தால் அவர்கள் திருவெண்காட்டில் இருக்கக்கூடிய சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய குளத்தில் கை கால்கள் எல்லாம் கழுவி விட்டு அங்கு அகோர மூர்த்தி சன்னிதானத்தில் அமர்ந்து பிறகு வீடு திரும்பும் பொழுது நம்முடைய குறைகளுக்கு ஏற்ற நிவர்த்தி உடனடியாக கிடைப்பதை நாம் பார்க்கலாம்.
ஆக சனி பகவானை விட புதன் பகவான் மிகவும் மோசமான பலன்களை கொடுக்க இருப்பதால் புதன் கிரகத்தை நாம் வழிபாடு செய்வதும் அவசியமாக இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |