நீங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்ட பொருட்கள் என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது பிறந்த தேதியில் கூட்டுத் தொகையில் கிடைக்கின்ற இறுதி ஒற்றை எண் தான் நமக்குரிய ரேடிக்ஸ் எண்ணாகும்.
இந்த எண்கள் வைத்தும் நாம் தனிநபரின் குணாதிசயங்கள் வாழ்க்கை முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம். அப்படியாக, ஒவ்வொரு எண்ணிற்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் இருக்கிறது. அந்த வகையில் எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு என்ன பொருட்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியது என்று பார்ப்போம்.
எண் 1:
எந்த மாதத்திலும் 1, 10, 19 28 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு எண் ஒன்று வரும். இவர்களுக்கு அதிர்ஷ்ட பொருளாக செம்பு நாணயம் இருக்கிறது. இதை அவர்களுடன் எப்போதும் வைத்திருக்கும் பொழுது நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கிறது.
எண் 2:
எந்த மாதத்திலும் 2,19,20,29 ஆகிய தேதியில் பிறந்தவர்களின் எண் இரண்டு ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருளாக வெள்ளி நாணயம் இருக்கிறது. அதை இவர்கள் எப்பொழுதும் தங்களுடன் வைத்திருக்கும் பொழுது எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

எண் 3:
குரு பகவானுடைய தொடர்பு கொண்ட எண் மூன்று ஆகும். இவை செழிப்பு மற்றும் செல்வாக்கை குறிக்கக் கூடியதாக பார்க்கப்படுகிறது. இந்த எண்கள் கொண்டவர்கள் தங்களுடன் எப்பொழுதும் மஞ்சள் நிற கைக்குட்டை அல்லது வெள்ளை நிற கைக்குட்டை வைத்திருப்பது மகாலட்சுமி ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும்.
எண் 4:
இந்த எண் 4 ராகுவின் ஆற்றலுடன் தொடர்பு கொண்ட எண் ஆகும். இவை கடின உழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பெயர் பெற்றதாக இருக்கிறது. இவர்கள் தங்களுடன் எப்பொழுதும் மரப் பேனாவை வைத்திருப்பது நல்லது. மரத்தால் செய்யப்பட்ட பேனா இல்லாமல் வேறு பொருட்களையும் இவர்கள் கைகளில் வைத்திருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எண் 5:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் தனித்துவமாக சிந்திக்கும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். இவர்களுடன் எப்பொழுதும் பச்சை நிற பொருட்களை வைத்திருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்.
எண் 6 :
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறார். அதனால் இவர்களுடன் எப்பொழுதும் நறுமணப் பொருட்களை வைத்திருப்பது இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும்.

எண் 7:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதீத ஆன்மீக சிந்தனையும் ஆற்றலும் இருக்கும். ஆதலால் இவர்கள் ஒரு கடிகாரத்தை தங்களுடன் வைத்திருப்பது இவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கொடுக்கும்.
எண் 8:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சனிபகவானுடைய தொடர்பு இருக்கும். அதனால் இவர்கள் எப்பொழுதும் நீல நிறத்தை தங்களுடன் வைத்திருப்பது சனி பகவானுடைய அருளைப் பெற்றுக் கொடுப்பதோடு அதிர்ஷ்டம் இவர்களுக்கு தேடி வரும்.
எண் 9:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் துணிச்சலான குணம் இருக்கும். எப்பொழுதும் அவர்களுடன் சிவப்பு நிற நூல் வைத்திருப்பது மிகப்பெரிய அளவில் வலிமையையும் செய்யும் காரியங்களில் வெற்றியையும் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |