உங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்ட பெயர் எது தெரியுமா?
ஜோதிடத்தில் எண் கணிதம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதாவது எவ்வாறு நம்முடைய ஜாதகத்தில் கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதை போல் நாம் பிறந்த தேதியும் நமக்கான எண்களும் நம்மளுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு பெறுகிறது.
அப்படியாக ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பிறந்த தேதிக்கு ஏற்ப ஒரு அதிர்ஷ்டமான பெயர் கட்டாயம் உண்டு. அந்த பெயரை அவர்கள் வைத்துக் கொள்ளும் பொழுது நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல பலனை பெறுவார்கள். காரணம் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு தனித்துவமான காரகத்துவங்கள் இருக்கிறது.
அதாவது, ஒவ்வொரு பெயருமே கிரகங்களால் ஆட்சி செய்யப்படுகிறது அதனால் ஒரு பெயரை நாம் ஒருவருக்கு வைக்கும் பொழுது அந்த பெயருக்கான தாக்கத்தை அந்த தனிநபர் வாழ்வில் நாம் காணலாம்.
அந்த வகையில் எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எது அதிர்ஷ்டமான பெயர் என்று பல்வேறு எண் கணிதம் தொடர்பான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |