சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் நடை அடைப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயில், ஆந்திர மாநிலம் திருப்பதி நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற வைணவக் கோயிலாகும்.
இது திருமலை ஏழுமலையானின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது, மேலும் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.
திருமலையில் உள்ள ஏழு மலைகளில், ஏழாவது மலையில் கோயில் அமைந்துள்ளதால், ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், வருகிற மார்ச் மாதம் 3ஆம் திகதி மாலை 3.20 மணியில் இருந்து மாலை 6.47 மணி வரை சுமார் 3½ மணி நேரம் சந்திர கிரகணம் நிகழ்கிறது.

சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே கோவில் நடைகளை மூடும் பாரம்பரியம் உள்ளது.
அதன்படி, மார்ச் மாதம் 3ஆம் திகதி காலை 9 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படுகிறது.
கோவில் சுத்தி உள்ளிட்ட பரிகாரச் சடங்குகள் முடிந்ததும் இரவு 8.30 மணிக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |