செல்வச் செழிப்பை அள்ளி தரும் மச்ச மணி! இதை பற்றி தெரியுமா?
இயற்கையாக பூமியில் உருவாகக்கூடிய அதிர்ஷ்ட கற்கள் நமக்கு நிறைய பலன்களைத் தருகின்றன. இயற்கையாகத் தோன்றிய நவரத்தினக் கற்கள் நம்மை நவகிரகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.
இதுபோலவே, இயற்கையாகத் தோன்றிய நாம் அறிந்திடாத பல கற்கள் பூமியில் உள்ளன. அவற்றால் எண்ணற்ற பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன.
அதில் ஒன்றுதான் மச்ச மணி. மச்ச மணி என்பது மீனின் தலையில் இயற்கையாக உருவாகக்கூடிய ஒரு அரிய வகை மணியாகும். இதைப் பற்றிய குறிப்புகள் ராமாயணத்தில் உள்ளது.
அனுமன் இலங்கையை எரித்துவிட்டு வரும்போது அவருடைய உடல் முழுவதும் வியர்த்து அதிலிருந்து ஒரு துளி வியர்வை கடலிலேயிருக்கும் மீனின் வாயில் விழுந்தது.
இதனால் அந்த மீன் கர்ப்பம் தரிக்கிறது. அந்த கர்ப்பம் தரித்த மீனின் பிள்ளைதான் மகர்வாஜ் . அந்த கர்ப்பம் தரித்த மீனை அஹிராவணா எனும் பாதாளத்தை ஆண்டுக்கொண்டிருந்த ராவணனுடைய தம்பி வெட்டி விடுகிறான். அதிலிருந்து வெளியே வருகிறான் மகர்வாஜ். அவனின் கையிலே மச்ச மணி இருக்கிறது.
அதைப் பார்த்த அஹிராவணா, ‘இது என்னவென்று கேட்கிறார்?. ‘அந்தக் கல் தனது தாயின் தலையில் இருந்ததாகவும், அதைத்தான் நான் வைத்திருக்கிறேன்’ என்றும் கூறியிருக்கிறார்.
ராகுகால நேரத்தில் மகர்வாஜ் ஜனனம் புரிந்தார். அதனால் அவர் மீது ராகுவின் கதிர்கள் படக்கூடாது என்று தாய் மீன் தனது தலையில் இருந்த மச்ச மணியை வைத்து பாதுகாப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது.
கருட புராணத்திலும் மச்ச மணியை பற்றிய குறிப்புகள் உள்ளன.
இந்த மச்ச மணியானது, கோள வடிவத்தில், பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். இந்த மச்ச மணி மீனின் தலையிலே இருப்பது மட்டுமின்றி, சில சமயங்களில் ஆழங்களிலே இருக்கக்கூடிய திமிங்கலத்தின் வாயில் கூட இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
மச்ச மணியை அணிந்து கொள்பவர்களுக்கு வாஸ்து தோஷம் ஏற்படாது.
ராகு கிரகத்தால் ஏற்படும் எந்த பாதிப்புகள் வராது. இந்த மச்ச மணியை வீட்டில் வைத்துக்கொண்டால், எந்த வித நோய் நொடிகளின் தொல்லையும் இருக்காது.
நம்மைச் சுற்றியிருக்கும் இடத்தையெல்லாம் சுத்தப்படுத்தும் என்று கூறுகிறார்கள்.
இந்த மச்ச மணியை அணிந்துக்கொண்டால் பணப்பற்றாக்குறை தீரும். செல்வச் செழிப்பு பெறுவார்கள். இது ஏராளமான அதிஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கக்கூடியது.
திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். மச்ச மணியை அணிந்து கொள்பவர்கள் நிதானமாகவும், அறிவில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள்.
இது மிகவும் புனிதமான மணி என்பதால் ஒருமுறை தொலைத்து விட்டால் திரும்பவும் கைக்கு கிடைக்காது. எனவே, பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இந்த மச்ச மணி பழுப்பு நிறம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதை வீட்டிலே வைத்தாலே போதுமானது, அனைத்து செல்வச் செழிப்பையும் கவர்ந்திழுக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |