மதுரை அழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா

By Yashini May 07, 2024 11:11 AM GMT
Report

மதுரை மாவட்டத்தில் எழுந்தருளியுள்ள அழகர் கோவிலில் வைகாசி மாசம் நடைபெறும் வசந்த உற்சவ விழா முக்கியமான திருவிழா ஆகும்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான வைகாசி மாத வசந்த உற்சவ திருவிழா வருகின்ற 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக கோவிலின் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வருகின்ற 14ஆம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் வசந்த உற்சவ விழா தொடங்குகின்றது. 

மதுரை அழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா | Madurai Alagar Kovil Vasantha Utsavam Festival

இதில் கள்ளழகர் பெருமாள் தேவியர்களுடன் பல்லாக்கில் எழுந்தருளி வசந்த மண்டபம் சென்று எழுந்தருளுவார். இந்த விழா வருகின்ற 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

வசந்த உற்சவ திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் மாலையில் 5 மணிக்கு சுவாமி ஆசனத்தில் இருந்து புறப்படுவார்.

மதுரை அழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா | Madurai Alagar Kovil Vasantha Utsavam Festival

மேலும், ஆடி வீதிகள் வழியாக உலா வந்து கிருஷ்ணர் சன்னதி வழியாக 18ஆம் படி கருப்பணசுவாமி கோவில் வழியாகச் சென்று வசந்த மண்டபம் வந்தடைவார்.

இந்த திருவிழா 10 நாட்கள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US