Madurai Chithirai Thiruvizha: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது மதுரை சித்திரை திருவிழா
உலக பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றி இறங்குதல் என மதுரை மாநகர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது, இன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
* ஏப்ரல் 12 - மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றம் (காலை 09.55 முதல் 10.19 வரை)
* ஏப்ரல் 13 - காலை தங்க சப்பரம்; மாலை பூத வாகனம் (சுவாமி), அன்ன வாகனம் (அம்மன்)
* ஏப்ரல் 14 - காலை தங்க சப்பரம்; மாலை கைலாச பர்வதம் (சுவாமி), காமதேனு (அம்மன்)
* ஏப்ரல் 15 - காலை, மாலை தங்க பல்லக்கு
* ஏப்ரல் 16 - காலை தங்க சப்பரம், மாலை தங்க குதிரை
* ஏப்ரல் 17 - காலை தங்க சப்பரம், மாலை தங்க, வெள்ளி ரிஷப வாகனம்
* ஏப்ரல் 18 - காலை தங்க சப்பரம், மாலை நந்திகேஸ்வரர் (சுவாமி), யாளி (அம்மன்)
* ஏப்ரல் 19 - மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் காலை தங்க பல்லக்கு, மாலை வெள்ளி சிம்மாசனம் (அம்மன்)
* ஏப்ரல் 20 - மீனாட்சி திக்விஜயம், காலை மரவர்ண சப்பரம், மாலை இந்திர விமானம்
* ஏப்ரல் 21 - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், காலை வெள்ளி சிம்மாசனம், மாலை தங்க அம்பாரியுடன் யானை வாகனம், புஷ்ப பல்லக்கு
* ஏப்ரல் 22 - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேர்
* ஏப்ரல் 22 - கள்ளழகர் எதிர்சேவை
* ஏப்ரல் 23 - வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல்