மிகவும் சுயநலமான குணம் கொண்ட ராசிகள்.. யார் தெரியுமா?
நம்மை சுற்றி பல வகையான குணங்கள் கொண்ட மனிதர்களை நாம் பார்க்க முடியும். அதிலும் ஒரு சிலருக்கு ஒரு வேலை நம்மிடம் இருந்து கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் மிகவும் சுயநலமாக நடந்து கொள்ளக் கூடியதை நாம் பல நேரங்களில் காணலாம்.
அவர்கள் சுயநலமாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்தாலும் அவர்களுக்கான ஒரு விஷயம் என்று வரும் பொழுது அவர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் சுயநலமாகவே செயல்படுவார்கள். இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பு ஒரு காரணம், அப்படியாக எந்த ராசியினர் மிகவும் சுயநலமான குணம் கொண்டவர்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியை பொறுத்தவரை யாருக்கும் எந்த தீங்கையும் செய்ய மாட்டார்கள். ஆனால் இவர்களுடைய வேலை என்று வரும்பொழுது மிகவும் சுயநலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் முதலில் இவர்களுக்கே பல நேரங்களில் முக்கியத்துவம் கொடுப்பதை நாம் வெளிப்படையாக உறவுகளில், அலுவலகத்தில் காணமுடியும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு எதை செய்தாலும் இவர்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய ஒரு விஷயத்தை மட்டுமே செய்வார்கள். பிறரை பற்றிய எண்ணம் இவர்களுக்கு இருந்தாலும் இவர்களே இவர்களுக்கு முதன்மையாக இருப்பதால் எந்த நிலையிலும் இவர்களை விட்டுக் கொடுக்காமல் அவர்களுக்கான காரியத்தை செய்வதில் மிகுந்த சுயநலத்தோடு செயல்படுவார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினர் மிகவும் அறிவாளியாக இருந்தாலும் இவர்கள் ஒருவரிடம் பழகுவது கூட இவர்களுடைய சுயநலத்திற்காக இருக்கிறது. இவர்களுக்கு சுயநலத்தை தவிர்த்து வேறு எதுவும் யோசிக்க தெரியாத ஒரு மனப்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு வருடத்தில் ஏதேனும் ஆதாயம் இருந்தால் மட்டுமே அந்த நபரிடம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் எப்பொழுதும் அவர்களுடைய நேரத்தை சரியானதாக பயன்படுத்த வேண்டும் என்று என்று எண்ணக் கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |