இந்த ஒரு விஷயம் செய்தால் கடவுள் உங்கள் பக்கம் நிற்பார்.. என்ன தெரியுமா?

By Sakthi Raj Feb 02, 2026 06:30 AM GMT
Report

இந்த பூமியில் பிறந்த எந்த ஒரு உயிரினத்தினுடைய வாழ்க்கையும் அவ்வளவு எளிதானது அல்ல. எல்லோரும் அவர்களுக்கு உரிய போராட்டத்தை சந்தித்து வாழவே இங்கு பிறந்திருக்கிறார்கள். அப்படியாக இந்த பிரபஞ்சம் என்பதே நன்மை, தீமை, தர்மம், அதர்மம் என்ற ஒரு கட்டமைப்புக்குள் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது.

அதனால் இங்கு மனிதர்களுக்கு நன்மை செய்யவும் ஒரு வாய்ப்பு இந்த பிரபஞ்சம் கொடுக்கிறது. தீமை செய்யவும் ஒரு வாய்ப்பை பிரபஞ்சம் கொடுக்கிறது. ஆனால் இதில் நாம் எதை தேர்ந்தெடுக்கின்றோம் என்பதில் தான் நம்முடைய எதிர்காலம் அமைந்திருக்கிறது.

அந்த வகையில் நீங்கள் தர்மம் என்ற ஒரு விஷயத்தை கையில் எடுத்து விட்டீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு எட்டு திசைகளில் இருந்தும் பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கும். காரணம் இங்கு தர்மத்தோடும், நல்ல மனதோடு வாழ்வதுதான் மனிதர்களுக்கு கடினமான ஒன்று.

இந்த ஒரு விஷயம் செய்தால் கடவுள் உங்கள் பக்கம் நிற்பார்.. என்ன தெரியுமா? | Why Patience Is Important In Life To Get Success

12 ராசிகளிடமும் இருக்கக்கூடிய மிக மோசமான குணம் என்ன தெரியுமா?

12 ராசிகளிடமும் இருக்கக்கூடிய மிக மோசமான குணம் என்ன தெரியுமா?

தர்மத்தோடு வாழ வேண்டும் என்றால் நாம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும், நடுநிலையாக நிற்க வேண்டும். இதற்கு நம்முடைய சிந்தனையும் செயலும் சில கட்டுப்பாட்டுகளை எதிர்பார்க்கும். இந்த கட்டுப்பாடுகள் மனிதருக்கு பல நேரங்களில் பிடிக்காத ஒன்றாகவே இருக்கிறது.

ஆக தர்மம், ஒழுக்கம் என்ற ஒரு சில விஷயங்கள் பல நேரங்களில் சில மனிதர்களுக்கு கசப்பான ஒரு உணர்வையே கொடுக்கிறது. அந்த வகையில் என்னதான் நீங்கள் நன்மையை தேர்வு செய்து தர்மத்தை உங்களுடைய முழுமூச்சாக கொண்டிருந்தாலும், அதர்மமானது உங்களை பல வழியில் வந்து சோதிக்கும்.

அந்த நேரங்களில் மனம் தளராமல் நீங்கள் ஒரு விஷயம் செய்து விட்டீர்கள் என்றால் நிச்சயம் அந்த இறைவனே உங்களுக்கு இறங்கி வந்து பல வாய்ப்புகளை உருவாக்கி தருவார். அதுதான் "பொறுமை". மேலும், உண்மையை எத்தனை வடிவில் மாற்றினாலும் அது உண்மையாகவே இருக்கும்.

ஆக உங்களுக்கு தீங்கு செய்கிறார்கள் அல்லது உங்களுடைய முன் ஜென்ம வினையானது உங்களை இந்த பிறவியில் பல துன்பத்திற்கு தள்ளுகிறது என்றாலும் நீங்கள் நல்ல மனிதராகவும் உங்களை ஒரு சிறந்த மனிதராகவும் மாற்றிக்கொள்ள நீங்கள் முயற்சி செய்யும் பொழுது "பொறுமை" என்ற ஒரு குணமும் உங்களுடன் பயணிக்க தொடங்கும்.

இந்த ஒரு விஷயம் செய்தால் கடவுள் உங்கள் பக்கம் நிற்பார்.. என்ன தெரியுமா? | Why Patience Is Important In Life To Get Success

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய 5 சக்தி வாய்ந்த மந்திரங்கள்

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய 5 சக்தி வாய்ந்த மந்திரங்கள்

அந்த பொறுமை என்கின்ற பயணம் தான் உங்களை இறைவன் என்கின்ற அவனுடைய ஆலயத்திற்கு கூட்டி செல்ல போகிறது. இந்த பொறுமை என்கின்ற விஷயம் மிகப்பெரிய ஒரு போராட்டமான களமாக இருந்தாலும் நிச்சயம் அதனுடைய இறுதி வெற்றியாகவே இருக்கும். நீங்கள் நினைத்ததை சாதிக்கக்கூடிய ஒரு காலமாகவே அமையும்.

ஆதலால், நல்ல அறிவு, ஞானம், தெய்வீக சிந்தனை இது எல்லாம் இருந்தும் ஒரு மனிதன் பொறுமையை இழந்து விட்டான் என்றால் நிச்சயம் அவனுக்காக இறைவன் கொடுக்கக்கூடிய அத்தனை பரிசுகளும் அவன் அனுபவிக்க முடியாத நிலை வந்துவிடும்.

ஆதலால் நீங்கள் இந்த உலகில் என்ன விஷயம் செய்ய வேண்டும் என்றாலும் பொறுமையாக நிதானமாக அதை செய்யும் பொழுது இந்த பிரபஞ்சமே உங்களுக்கு இறங்கி வந்து உதவி செய்யக்கூடிய ஒரு வாய்ப்பை கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US